வைரல்

புறநகர் ரயிலில் தலைமுடியை பிடித்து சண்டையிட்ட பெண்கள்..நடுவில் சிக்கிய காவலருக்கு நேர்ந்த பரிதாபம்?Video!

மும்பையில் புறநகர் ரயில் பெண் பயணிகள் ஒருவருக்கொருவர் தலைமுடியை பிடித்து இழுத்து மோதிக்கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

புறநகர் ரயிலில் தலைமுடியை பிடித்து சண்டையிட்ட பெண்கள்..நடுவில் சிக்கிய காவலருக்கு நேர்ந்த பரிதாபம்?Video!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நெரிசல் மிகுந்த நகரங்களில் பட்டியல் எப்போதும் மும்பை முன்னிலை வகிக்கிறது. அதுமட்டுமின்றி இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகவும் மும்பை திகழ்ந்து வருகிறது. இதில் பெரும்பாலான மக்கள் நடுத்தர மற்றும் எளிய பின்புலத்தை கொண்டவர்கள் என்பதால் இவர்கள் வேலைக்கு செல்ல புறநகர் மின்சார ரயிலையே பயன்படுத்துகிறார்கள்.

அதிக மக்கள் பயன்படுத்துவதால் மும்பை புறநகர் மின்சார ரயில்களில் எப்போதும் கூட்டம் அலைமோதும். பயணிகள் நெருக்கியடித்து செல்வது அங்கே எப்போதும் காணக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது. அதிலும் பீக் நேரத்தில் ரயில் நிலையங்களில் அலைகடல் போல மக்கள் திரண்டிருப்பார்கள்.

புறநகர் ரயிலில் தலைமுடியை பிடித்து சண்டையிட்ட பெண்கள்..நடுவில் சிக்கிய காவலருக்கு நேர்ந்த பரிதாபம்?Video!

நெரிசல் மிகுந்த இடங்களில் சண்டை என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாகவே திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், மும்பையின் தானே - பன்வெல் மின்சார ரயிலில் திடீரென பெண் பயணிகள் ஒருவரை ஒருவர் அடித்து கொள்ளும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடீயோவில் பெண் பயணிகள் ஒருவருக்கொருவர் தலைமுடியை பிடித்து இழுத்து மோதிக்கொள்கின்றனர். அப்போது அதை தடுக்க பெண் காவலர் ஒருவர் வந்த நிலையில், அவரையும் அந்த பெண்கள் தாக்கியுள்ளனர். இதில் அந்த காவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருக்கை தொடர்பாக மூன்று பெண் பயணிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறே மோதலுக்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories