India
ம.பி : பிறந்து 20 நாட்களே ஆன இரட்டை குழந்தைகள்.. கழுத்தை நெரித்து கொன்று வீசிய கொடூர தாய்.. பின்னணி என்ன?
மத்திய பிரதேச மாநிலம் போபால் உள்ள ஒரு தம்பதியினரின் பிஞ்சு குழந்தைகள் கடந்த செப்., 23-ம் தேதி காணாமல் போனதாக காவல்நிலையத்திற்கு புகார் வந்தது. இதையடுத்து அவர்கள் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஹபிப் கஞ்ச் என்ற பகுதியில் இறந்து பிஞ்சு குழந்தைகளின் சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அவர் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது அந்த சிசுக்கள் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் குழந்தைகள் யாருடையது? யார் கொலை செய்தது என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன.
பின்னர் இந்த சிசுக்கள் காணாமல் போனதாக புகார் வந்த குடும்பத்தினரின் குழந்தைகள் என்று தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் குழந்தைகளை கண்டெடுத்த பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த குழந்தைகளின் தாயே குழந்தைகளை கொன்றுள்ளது தெரியவந்தது. பின்னர் அவரிடம் தொடர்ந்து விசாரித்ததில், தனது குடும்பம் வறுமையில் கஷ்டப்படுவதால் தனது குழந்தைகளின் கழுத்தை நெரித்துக் கொன்று, உடலை கட்டிடத்தின் பின்புறத்தில் வீசியதாகவும், அப்பகுதி முழுவதும் குப்பை, புதர் மண்டி கிடப்பதால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என நினைத்ததாகவும், யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க காவல்துறையில் புகார் அளித்ததாகவும் வாக்குமூலம் கொடுத்தார்.
மேலும் சப்னாவின் கணவர் கூலி தொழில் செய்து வருவதும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனநிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது. எனவே அவர் மனநிலை கோளாறு காரணமாக அவ்வாறு செய்தாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதயடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிசுக்கள் கொலை தொடர்பாக சுமார் 60-க்கும் மேற்பட்ட நபர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பெற்ற தாயே குழந்தையை கொன்றுள்ளது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!