இந்தியா

“காண்டம் தரணும்னு சொல்லுவீங்களோ?” : பள்ளி மாணவியிடம் சர்ச்சை பேச்சு - பெண் அதிகாரிக்கு குவியும் கண்டனம்!

பள்ளி மாணவியிடம் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அதிகாரி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

“காண்டம் தரணும்னு சொல்லுவீங்களோ?” : பள்ளி மாணவியிடம் சர்ச்சை பேச்சு - பெண் அதிகாரிக்கு குவியும் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பீகார் மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற கருந்தரங்கில் ஐ.ஏ.எஸ் அதிகாரிக் ஹர்ஜோத் கவுர் கலந்துக்கொண்டு உரையாற்றினார். அப்போது பள்ளி மாணவிகளிடையே நடந்த கலந்துரையாடலின் போது, மாணவி ஒருவர், “அரசாங்கம் நிறைய இலவசங்களை வழங்கிறது. ஆனால் 20 முதல் 30 ரூபாய் வரை செலவாகும் சானிட்டரி பேடுகளை அரசால் வழங்க முடியாதது ஏன்” எனக் கேள்வி எழுப்பினார்.

மாணவி கேட்ட நியாயமான கேள்வியால் ஆத்திரமடைந்த ஹர்ஜோத், மாணவிக்கு அருவருக்கத்தக்க வகையில் பதில் ஒன்றை அளித்துள்ளார். அதாவது ஹர்ஜோத் அளித்த பதிலில், இன்று நாப்கின் கேட்பீர்கள்; நாளை ஜீன்ஸ் பேன்ட் கேட்பீர்கள். கடைசியாக காண்டம் போன்றவற்றை அரசே தர வேண்டுமென்று எதிர்பார்ப்பீர்கள்” எனத் தெரிவித்திருக்கிறார்.

பெண் அதிகாரின் இந்த பதிலால் அந்த மாணவி சங்கட நிலைக்கு ஆளாகியதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் விடாத அந்த மாணவி, “அரசை மக்கள் தான் தேர்ந்தெடுக்கின்றனர். அப்படியென்னால் மக்கள் தங்களின் உரிமையை கேட்கத்தான் செய்வார்கள். இந்த அரசாங்கத்துக்கு மக்களின் வாக்குகள் வேண்டும் தானே” என துணிச்சலாக கேள்வி எழுப்பினார்.

ஆனால், அதற்கு மதிப்பளிக்காமல் தான் உயர்ந்தபொறுப்பில் உள்ள அதிகாரி என்பதை உணராத வகையில், அப்படியெல்லாம் நீங்கள் நினைக்க வேண்டும். உங்கள் வாக்குகளை அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை. இதுபோல நீங்கள் நினைப்பீர்களேயானால் நீங்கள் வாக்கு அளிக்கவேண்டாம். பாகிஸ்தானை போல மாறிவிடுங்கள்” எனக் கூறியுள்ளார்.

ஹர்ஜோத்தாவின் இந்த பேச்சைக் கேட்ட பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு சில நேரம் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைராகி, நெட்டிசன்கள் பலரும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories