India
கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி, பாட்டி.. உறவினர்களால் நேர்ந்த கொடூரம் : ம.பி-யில் அதிர்ச்சி!
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரை பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறைக்காக தனது மாமா வீட்டிற்கு தங்க சென்றுள்ளார். இவர் சென்ற ஒரு வாரத்திலேயே, சிறுமியை சிலர் தாக்கி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது இதனை தடுக்க சென்ற பாட்டியையும் வன்கொடுமை செய்து அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இதையடுத்து சில மணி நேரங்களில் அந்த வழியாக வந்த சிலர், காயங்களுடன் மயக்கத்தில் இருந்த சிறுமியையும், பாட்டியையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் பாட்டி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி சிறுமியும் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் சிறுமி மற்றும் பாட்டிக்கு நடைபெற்ற உடற்கூராய்வில் இருவரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உண்மை என்று தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் தந்தை, தனது தாய், மற்றும் மகள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதாக குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது பாட்டியை பாலியல் வன்கொடுமை செய்தது அவர்களது உறவினர்களில் ஒருவர் என்று தெரியவந்தது. இதையடுத்து குற்றவாளிகளை தேடி சென்ற காவல்துறையினர் அதில் ஒருவரை கைது செய்தனர். மற்றவர் தலைமறைவானதால் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விடுமுறையை கழிக்க உறவினர் வீட்டுக்கு சென்ற சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததும், தடுக்க வந்த பாட்டியையும் வல்லுறுவுக்குக் ஆளாக்கி கொன்றுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
நிதி நிறுவன மோசடி... பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு !
-
அகமதாபாத் விமான விபத்து : விபத்துக்கு விமானிகள் காரணம் என்பதை ஏற்கமுடியாது... விமானிகள் சங்கம் காட்டம் !
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“அதிமுக - பாஜக சதித்திட்டத்தை உணர்ந்து ‘ஓரணியில்’ திரளும் மக்கள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
ஆங்கில வழிக் கல்விக்கு எதிரான தேசிய கல்விக் கொள்கை! : ‘தி இந்து’ தலையங்கம் விமர்சனம்!