India
ஆசி வாங்க காலை தொட்ட பட்டியலின BJP MP.. அசிங்கம் என்று சொல்லி காலை தூக்கி முகம் சுளித்த சங்கராச்சாரி ?
உத்தரபிரதேச மாநிலம் எத்வா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் ராம்சங்கர் கதேரியா. பட்டியலின எம்.பியான இவர் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக வலம் வருகிறார். இந்த நிலையில், இவர் தொடர்பான சர்ச்சை ஒன்று வெளிவந்துள்ளது.
பூரி சங்கராச்சாரியாரை ஒரு விழாவுக்காக ராம்சங்கர் கதேரியா அழைக்க சென்றுள்ளார். அப்போது சங்கராச்சாரியாருக்கு வணக்கம் வைத்த எம்.பி அவரின் காலில் விழுந்து ஆசி வாங்க முயன்றுள்ளார். அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த சங்கராச்சாரியார் எம்.பி காலில் விழ வந்ததும் கால்களை தூக்கி விடுகிறார்.
இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. ராம்சங்கர் எம்.பியாக இருந்தாலும் அவர் தலித்தாக இருப்பதால் சங்கராச்சாரியார் தன் கால்களை தொட கூட அவரை அனுமதிக்கவில்லை என விமர்சனம் எழுந்தது.
இது குறித்து இணையவாசி ஒருவர் கூறுகையில், "தலித் எம்.பி ராம்சங்கர் கத்தேரியா சங்கராச்சாரியாரின் பாதங்களைத் தொட்டால், சங்கராச்சாரியார் தூய்மையற்றவராகிவிடுவார். எம்.பி.யாக இருந்தும் தரையில் அமர்ந்து இருக்கிறார்" என்று கூறியுள்ளார்.
இது குறித்து விளக்கமளித்த எம்.பி.ராம்சங்கர் "அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. இதை நான் வன்மையாகக் கண்டிப்பதோடு, இதையெல்லாம் தவறாகக் காட்டும் இத்தகையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோருகிறேன்." என்று கூறியுள்ளார். ஆனாலும் இந்த புகைப்படம் உண்மையானது என பல்வேறு செய்தி நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
ஆதிசங்கரர் நிறுவிய 4 மடங்களில் ஒன்று பூரி சங்கரமடம். ஒரிசாவில் அமைந்துள்ள இந்த சங்கரமடத்தின் 145-வது தலைமை குருவாக சரஸ்வதி மஹாபாக் இருந்து வருகிறார். உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற விழா ஒன்றுக்கு அழைக்க சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!