India
மணிக்கு 246 கிலோ மீட்டர் வேகம்.. அதிநவீன H-145 ஹெலிகாப்டர்: ரூ.100 கோடிக்கு வாங்கிய முதல் 2 இந்தியர்கள்!
கேரளாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் யூசுப் அலி. இவர் சர்வதேச அளவில் புகழ்பெற்ற லூலூ சூப்பர் மார்க்கெட் குழுமத்தின் தலைவர் ஆவார். 2018-ல் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட பட்டியலின்படி அரபு நாடுகளில் தொழில் செய்யும் 100 இந்திய தொழிலதிபர்களில் முதல் இடத்தில் யூசுப் அலி இருந்தார்.
கேரள மாநிலம் திருச்சூரின் நத்திகா கிராமத்தில் பிறந்தவர் யூசுப் அலி. இவர் அதே கிராமத்தில் பள்ளிப்படிப்பும், பிசினஸ் மேனேஜ்மெண்டில் டிப்ளமோவும் படித்து முடித்ததும், 18 வயதில் அபுதாபிக்குச் சென்றார். தனது மாமா அப்துல்லாவின் வியாபரத்தில் இணைந்த யூசுப் அலி, பின்னர் வியாபாரத்தை மேம்படுத்தினார். தொடர்ந்து உணவு மற்றும் உணவு அல்லாத துறைகளிலும் வியாபாரத்தை வளர்த்தார் யூசுப் அலி.
இந்த நிறுவனத்தின் விற்பனை அளவு ஆண்டிற்கு 7.4 அமெரிக்க பில்லியன் டாலர்கள். லூலூ குரூப் இண்டர்நேஷனலுக்கு இன்று உலகம் முழுக்க 215 கடைகள் உள்ளன. ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா என உலகின் 4 கண்டங்களில் பரந்து விரிந்திருக்கிறது இந்நிறுவன கடைகள்.
அதேபோல் கேரளாவைச் சேர்ந்த மற்றொரு தொழிலதிபர் பி.ரவி பிள்ளை. இவரது ஆர்.பி குழுமம் உலகம் முழுவதும் உள்ளது. அந்நிறுவனம் ஆண்டிற்கு 2.5 பில்லியன் வருவாய் ஈட்டிவருகிறது. அவரது ஆர்.பி. குழுமம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்த இரண்டு தொழிலதிபர்கள்தான் ரூ.100 கோடிக்கு அதிநவீன எச் 145 ஹெலிகாப்டர் வாங்கியுள்ளார். இந்தியாவிலேயே முதன் முதலில் ஏர்பஸ் எச் 145 ஹெலிகாப்டரை வாங்கியவர் பி.ரவி பிள்ளைதான். இதற்கு அடுத்தபடியாக இரண்டாவதாக லுலு குழுமத்தின் தலைவர் எம்.ஏ.யூசப் அலி வாங்கியுள்ளார்.
ஏர்பஸ் எச் 145 ஹெலிகாப்டரில் ஒரே நேரத்தில் 2 விமானிகள் உட்பட 7 பேர் பயணம் செய்ய முடியும். இந்த விமானம் கடல் மட்டத்திலிருந்து 20 ஆயிரம் அடி உயரத்தில் மணிக்கு 246 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!