India
மகனை அடித்தே கொலை செய்த தந்தை.. இதற்காகவா இப்படி செய்தார் ? வெளிவந்த அதிர்ச்சி காரணம் !
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள தொட்டநாகரா கிராமத்தை சேர்ந்தவர் ஆஷா. இவருக்கும் அதே பகுதியில் உள்ள பிளிசாரே கிராமத்தை சேர்ந்த சதீஸ் என்பவருடன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது இவர்களுக்கு சுப்ரீத் என்ற ஒரு மகனும் இருக்கிறார்.
3 ஆண்டுகள் ஒன்றாக இருந்த இவர்கள் பின்னர் சில பிரச்னைகள் காரணமாக பிரிந்து விட்டனர். அதன் பின்னர் சில மாதங்களுக்கு முன்னர் உமேஷ் என்பவரை ஆஷா திருமணம் செய்துகொண்டுள்ளார். ஆஷாவின் மகனும் இவர்களோடு வசித்து வருகிறார்.
தற்போது 7 வயதாகும் சுப்ரீத் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். இந்நிலையில் சிறுவன் சுப்ரீத்திற்கு உமேஷ் வீட்டுப்பாடம் சொல்லிக்கொடுத்துள்ளார். அப்போது சுப்ரீத் சரியாக வீட்டுபாடம் எழுதாததால் உமேஷ் ஆத்திரம் அடைந்து அவரை அடித்து கீழே தள்ளியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த சுப்ரீத்தின் அழுகை சத்தம் கேட்டு அங்கு வந்த தாய் ஆஷா உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக பெங்களூருவிற்கு கொண்டு செல்லும்படி கூறியுள்ளனர்.
அதன்படி சிறுவன் பெங்களூரு சென்றபோது வழியிலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் வழக்கு பதிவு செய்து உமேஷிடம் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்ட நிதி.. மலேசியாவில் தவிக்கும் மாணவர்கள்” : அன்பில் மகேஸ் கண்டனம்!
-
தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் : அரசின் நடவடிக்கை என்ன? - பேரவையில் மனோஜ் பாண்டியன் கேள்வி!
-
டெண்டரில் முறைகேடு.. முதலமைச்சர் அலுவலகத்திலேயே நடந்த ஊழல்? - பகீர் கிளப்பும் செய்தியின் பின்னணி என்ன?
-
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மீது 2 வழக்குகள் : உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்!
-
“3 மாதத்தில் முதலமைச்சருக்கு வந்த பயம்.. சுதந்திர தின உரையா இது?” : வறுத்தெடுத்த முரசொலி தலையங்கம்!