India
உ.பி-யில் பெண்ணை தாக்கிய விவகாரம்: பாஜக நிர்வாகிக்கு ஜாமீன் மனுவை நிராகரித்து நீதிபதி அதிரடி !
உத்தர பிரதேச மாநிலம், நொய்டா பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒன்றில் வசித்து வருபவர் பா.ஜ.க நிர்வாகி ஸ்ரீகாந்த் தியாகி. கடந்த வாரம் இவர், தனது குடியிருப்பில் உள்ள ஒரு இடத்தை ஆக்கிரமித்து அங்கு செடிகளை வைத்துள்ளார். இதைப்பார்த்த அதே குடியிருப்பைச் சேர்ந்த பெண் ஒருவர் இது விதிமீறலாக இருப்பதாக அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த வாக்குவாதம் இருவருக்குமிடையே மோதலாக வெடித்த நிலையில், அந்த பெண்ணை ஸ்ரீகாந்த் ஆபாசக பேசியுள்ளார். மேலும் அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பான வீடியோவும் அண்மையில் வெளியாகி வைரலாகி வந்தது. இதையடுத்து இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம், ஸ்ரீகாந்த் தியாகியைக் கைது செய்யக்கோரி கண்டனம் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஸ்ரீகாந்த் ஆதரவாளர்கள் 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனிடையே ஸ்ரீகாந்த் தியாகி தலைமறைவானார்.
பெண்ணை ஆபாசமாக பேசிய மறுநாளே, ஸ்ரீகாந்த் தியாகியின் ஆக்கிரமிப்பு இடங்கள் காவல்துறையினர் புல்டோசர் கொண்டு இடித்தது. இது தொடர்பான காட்சிகளும் இணையத்தில் வைரலானது. மேலும் தலைமறைவான் ஸ்ரீகாந்த் தியாகி தேடும் பணியில் ஈடுபட்டு வந்த அதிகாரிகள் அவரது மனைவியிடம் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு மீரட் நகரில் தலைமறிவாகியிருந்த ஸ்ரீகாந்த் தியாகி மற்றும் அவருடன் இருந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதைதொடர்ந்து அவர் உத்தரபிரதேச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், ஜாமீன் மனு நேற்று தள்ளுபடி செய்து நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இவர் பாதுகாப்பான சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Also Read
-
கூட்டாட்சியின் குரலை நெரிக்கும் தொகுதி மறுவரையறை : நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி எதிர்ப்பு!
-
விஜய் தமிழ்நாட்டு மக்களுக்காக எந்த போராட்டக் களம் வந்துள்ளார்? : நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி!
-
”தமிழ்நாட்டின் குரலுக்கு ஒன்றிய பாஜக அரசு செவிசாய்த்தே ஆக வேண்டும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!
-
”குறையும் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம்.. பாகுபாடு காட்டும் பாஜக” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
கருப்புக்கொடி போராட்டம் டிரெயிலர்தான் மெயின் பிக்சரை பார்க்க ஆசைப்பட கூடாது - CM MK Stalin எச்சரிக்கை!