இந்தியா

ஆபாச பேச்சு.. பெண்ணை மிரட்டிய பா.ஜ.க நிர்வாகி: இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

உத்தர பிரதேசத்தில் பெண்ணை மிரட்டும் பா.ஜ.க நிர்வாகியின் வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆபாச பேச்சு..  பெண்ணை மிரட்டிய பா.ஜ.க நிர்வாகி: இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் ஸ்ரீகாந்த் தியாகி. இவர் பா.ஜ.க கட்சியை சேர்ந்தவர். மேலும் இக்கட்சியின் கிசான் மோர்ச்சா உறுப்பினராகவும், யுவ சமிதியின் தேசிய இணை ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.

இந்நிலையில் ஸ்ரீகாந்த் தியாகி, தனது குடியிருப்பில் ஒரு இடத்தை ஆக்கிரமித்து அங்கு செடிகளை வைத்துள்ளார். இதைப்பார்த்த அதே குடியிருப்பைச் சேர்ந்த பெண் ஒருவர் இது குறித்துக் கேட்டுள்ளார்.

ஆபாச பேச்சு..  பெண்ணை மிரட்டிய பா.ஜ.க நிர்வாகி: இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

இதற்கு ஸ்ரீகாந்தி தியாகி அந்த பெண்ணை ஆபாசமாக திட்டி மிரட்டியுள்ளார். இதை அங்கிருந்த யாரோ ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையடுத்து உத்தர பிரதேச போலிஸார் ஸ்ரீகாந்த் தியாகி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள ஸ்ரீகாந்த் தியாகியை விரைவில் கைது செய்வோம் எனவும் போலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஸ்ரீகாந்த் தியாகியின் சகோதரர், கார் ஓட்டுநர், மேலாளர் ஆகிய 3 பேரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பா.ஜ.க நிர்வாகியின் பெண்ணை மிரட்டும் வீடியோ வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories