India

பயணிகளை 1 கி.மீ நடக்க வைத்த SPICEJET .. விமான நிறுவனத்தை வறுத்தெடுக்கும் பயணிகள் ! இதுதான் காரணமா ?

ஏர் இந்தியா நிறுவனம் சமீபத்தில் டாடா நிறுவனத்துக்கு விற்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் அரசுக்கு சொந்தமான விமான நிறுவனம் இல்லாத நிலை ஏற்பட்டது. தனியார் நிறுவனங்களுக்கு பெரும் போட்டியாக இருந்த ஏர் இந்தியா தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டதால் தனியார் நிறுவனங்கள் பெரும் போட்டியாளர் இன்றி செயல்பட்டு வருகின்றனர்.

ஏர் இந்தியா விற்பனை செய்யப்பட்ட பின்னர் தனியார் நிறுவனங்களின் விமானங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றன. மேலும் பயணிகளை நடத்தும் விதத்திலும் பெரும் மாற்றம் இருப்பதாக பயணிகளும் புகார் தெரிவித்து வந்தனர்.

கடந்த மாதம் மட்டும் மூன்று வாரங்களுக்குள் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஏழாவது முறை பாதுகாப்பு தொடர்பான பிரச்சனை ஏற்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ஸ்பைஸ்ஜெட் பயணிகளை மோசமாக நடத்தியதாக சர்ச்சையில் சிக்கியுள்ளது.

கடந்த சனிக்கிழமை இரவு ஹைதராபாத்திலிருந்து டெல்லி சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் டெல்லியில் தரையிறங்கியுள்ளது. ஆனால் அங்கிருந்து சுமார் 45 நிமிடங்கள் ஆகியும் பயணிகளை ஏற்றிச்செல்ல பேருந்து வராமல் இருந்துள்ளது.

இதனால் கடும் அதிருப்தி அடைந்த பயணிகள் அங்கிருந்து கால் நடையாகவே வெளியேறும் இடத்துக்கு சென்றுள்ளனர். சுமார் 1.5 கி.மீ தொலைவில் உள்ள டெர்மினலை நோக்கி அவர்கள் நடக்கத்தொடங்கிய பின்னரே பேருந்து வந்துள்ளது.

இது தொடர்பாக பயணிகள் புகாரளித்த நிலையில், இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து DGCA விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கூறியுள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், "எங்கள் ஊழியர்கள் சிலர் எவ்வளவோ வலியுறுத்தியும் பயணிகள் சிலர் கேட்காமலேயே நடக்கத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் அவர்களால் சில மீட்டர்களை கடந்து நடக்க முடியவில்லை. இதனையடுத்து பேருந்து வந்ததும் அதில் ஏறி அவர்கள் பயணித்தனர்" எனக் கூறியுள்ளது.

Also Read: வாட்ஸ்அப்பில் கிண்டல் செய்ததால் ஆத்திரம்.. இளைஞரை கொடூரமான தாக்கிய நபர் கைது.. கேரளாவில் பரபரப்பு !