India
காதலனை மிரட்டிய முன்னாள் காதலி.. தலையை துண்டாக்கி காவல் நிலையத்தில் சரணடைந்த காதலன் : கர்நாடகாவில் பகீர்!
கர்நாடக மாநிலம் விஜயநகரம் பகுதியில் வசித்து வருபவர் போஜராஜா (வயது 25). இவரும் அதே பகுதியில் மூன்றாமாண்டு நர்சிங் படிக்கும் நிர்மலா (வயது 21) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். ஒரு முறை நிர்மலா வீட்டிற்கு பெண் கேட்டு போனபோது, நிர்மலா குடும்பத்தார் இவர்களது காதலுக்கு மறுப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து சில மாதங்களில் போஜராஜா வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து, தற்போது டிராக்டர் ஓட்டும் தொழில் செய்து வருகிறார். போஜராஜா வேறு பெண்ணை மணந்தால் மன உளைச்சலுக்கு ஆளான நிர்மலா, போஜராஜாவை மிரட்ட தொடங்கியுள்ளார். மேலும் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் உள்ளிட்டவையை மனைவியிடம் காண்பிக்கபோவதாக நேரடியாக மிரட்டியுள்ளார்.
இதனால் என்ன செய்வதென்று திகைத்த போஜராஜா, ஒரு கட்டத்தில் நிர்மலாவின் மிரட்டலால் மிகவும் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டார். எனவே நிர்மலாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி சம்பவத்தன்று கல்லூரி முடித்து தனது வீட்டுக்கு திரும்பிய நிர்மலாவை பின்தொடர்ந்துள்ளார் போஜராஜா. மேலும் நிர்மலா வீட்டில் யாருமில்லை என்பதால், அவரது வீட்டினுள் புகுந்து அவரிடம் சண்டையிட்டுள்ளார்.
இதனால் மீண்டும் நிர்மலா பதிலுக்கு பதில் அவரிடம் சண்டையிட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த போஜராஜா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், நிர்மலாவின் கழுத்தை கறகறவென அறுத்து துண்டாக்கினார். மேலும் அதனை எடுத்துக்கொண்டு கண்ணபோரனையாவின் ஹட்டி என்ற பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
இதையடுத்து சரணடைந்த போஜராஜா மீது காவல்துறையினர் இந்திய தண்டனைச் சட்டம் 302 (கொலை), 450 (குற்றம் செய்வதற்காக அத்துமீறி நுழைதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு கைது செய்தனர். முன்னாள் காதலியின் கழுத்தை அறுத்து காவல்துறையில் சரணடைந்த காதலன் செயல் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத் தொகையும் உயரும்; உரிமையும் உயரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!