India
4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் - உ.பி.யில் நடந்த அதிர்ச்சி சம்பவம் !
உத்தர பிரதேச மாநிலம், பாந்தா என்ற பகுதியிலுள்ள ஒரு கிராமத்தில் 4 வயதுடைய குழந்தைவீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது அங்கே வந்த ஃபரித் என்ற 22 வயதுடைய இளைஞர் அந்த சிறுமியை கடத்தி சென்றுள்ளார்.
மேலும் சிறுமி என்றும் பாராமல், பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அந்த குழந்தையை சம்பவ இடத்திலேயே விட்டு சென்றுள்ளார். பின்னர் அந்த பகுதியில் சென்ற வழிப்போக்கர் இரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தையை அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் யார் என்று விசாரித்து, குழந்தையின் பெற்றவர்களுக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவம் அறிந்து துடிதுடித்துப்போன பெற்றோர்கள் மருத்துவமனையில் வந்து பார்த்தபோது, சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், அதிக இரத்தப்போக்கு இருந்ததால் உயிருக்கு போராடி கொண்டிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் குழந்தையின் பெற்றோர்கள் புகாரளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், இந்த கொடூர செயலை செய்த ஃபரித்தை கண்டுபிடித்தனர். 4 வயது சிறுமியை வன்கொடுமை செய்த இளைஞர் மீது போக்சோ உள்ளிட்ட வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
Also Read
-
சென்னையில் 65 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: த.வெ.க இளைஞரணி நிர்வாகி கைது!
-
மின்வெட்டே கிடையாதென தமிழ்நாட்டு மக்கள் காதில் பூ சுற்றும் தவெகவின் மெகாவாட் பொய்கள் : முரசொலி தலையங்கம்!
-
வாக்களித்த மக்களுக்கு கைக்கொடுக்க இவ்வளவு தயக்கம் ஏன்? - முதலமைச்சரின் சர்ச்சை செயலுக்கு எழும் கண்டனம்!
-
அதிரடியாக ஜாகீர் கானை இறக்கிய சிஎஸ்கே.. தோனியின் மாஸ்டர் மைண்ட்.. இதுதான் ரகசியம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!
-
உயிரைக் காக்கும் மருந்தா? விளம்பரத்திற்கு பயன்படும் மோதிரமா? : த.வெ.க.வை நோக்கி எழும் கேள்விகள்!