India

இந்தியாவில் இருந்து வெளியேறும் இந்தியர்கள் எண்ணிக்கை இரு மடங்காக உயர்வு.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

பணி நிமித்தமாக வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்படி செல்லும் பலர் தாங்கள் செல்லும் நாடுகளிலேயே குடியுரிமை பெற்று நிரந்தரமாக விடுகின்றனர். வெளிநாடுகளில் குடியுரிமை பெறுபவர்கள் இந்திய குடியுரிமையை துறந்து விடுகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை இந்தியர்கள் குடியுரிமையை துறந்து வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளனர் என மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்க்கு எழுத்துப்பூர்வ பதிலை ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, கடந்த 2019 ஆம் ஆண்டு மட்டும் 1,44,017 இந்தியர்கள் குடியுரிமையை துறந்துள்ளனர் என்றும், கடந்த 2020 ஆம் ஆண்டில் 85,256 பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2021 ஆம் ஆண்டில் முந்தைய ஆண்டை விட இரு மடங்காக 1,63,370 பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் அதிகபட்சமாக கனடாவில் கடந்த 3 ஆண்டுகளில் 64,071 இந்தியர்கள் குடியுரிமை பெற்றுள்ளனர் என்றும், ஆஸ்திரேலியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 58,391 இந்தியர்கள் குடியுரிமை பெற்றுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்து, இத்தாலி, நியூசிலாந்து, ஜேர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகள் இருக்கிறது. சமீப காலமாக இந்தியாவில் இருந்து வெளியேறும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது இந்த அறிக்கையில் மூலம் தெரியவந்துள்ளது.

Also Read: மாட்டு வண்டிக்கு 3-வது சக்கரம்.. இணையத்தில் வைரலாக புகைப்படம் .. உருவான விதத்தை விளக்கிய மாணவர்கள்!