India
"GST வரி விதிப்பால் மக்களை நாம் காயப்படுத்துகிறோம்".. ஒன்றிய அரசை விமர்சித்த பா.ஜ.க MP!
மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்தே எல்லா பொருட்கள் மீதும் ஜி.எஸ்.டி வரியை விதித்து வருகிறது. இதனால் உணவு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருவது சாமானிய மக்களைப் பாதித்துள்ளது.
தற்போது இந்தியா கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து வரும் நிலையில், அரசி, பருப்பு, பால் உள்ளிட்ட பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்றிய அரசின் இந்த முடிவிற்குக் காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றன. நேற்று துவங்கிய நாடாளுமன்ற கூட்டத்தின்போதும் எதிர்க்கட்சிகள் உணவுப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இந்நிலையில் பா.ஜ.க எம்.பி வருண் காந்தி ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி வரி விதிப்பிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து வருண் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "வேலையில்லா திண்டாட்டத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் அதிக நிதிச்சுமையை இது ஏற்படுத்தும்.
குறிப்பாக வாடகை வீட்டில் வசிக்கும் இளைஞர்களுக்கு அதிக நிதிச்சுமை ஏற்படுத்தும். அவர்களுக்கு நிவாரணம் தேவைப்படும் போது நாம் அவர்களைக் காயப்படுத்துகிறோம்" என தெரிவித்துள்ளார். இதையடுத்து வருண் காந்தியின் ட்விட்டரை வைரலாக்கி ஒன்றிய அரசை இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.
Also Read
-
“அணுசக்தி என்பது வணிகப் பொருள் அல்ல!” : ஒன்றிய அரசின் ‘சாந்தி’ மசோதாவைக் கண்டித்த முரசொலி தலையங்கம்!
-
“இன்றும் கழகத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் நாகூர் ஹனிபா” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
-
டென்ஷனா இருந்தா... VIBE WITH MKS நிகழ்ச்சியில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வடகிழக்கு பருவ மழையால் பாதித்த பயிர்கள்: ரூ.289.63 கோடி நிவாரண நிதி அறிவித்த அமைச்சர் MRK பன்னீர்செல்வம்
-
போராட்டம் வாபஸ் - 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்!