India
பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரம்.. கணவன் செய்த கொடூர செயல்: உறவினர்கள் அதிர்ச்சி!
அசாம் மாநிலம், பைரப்நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஷகீல் அகமது. இவரது மனைவி சும்னா பேகம். இந்த தம்பதிக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் இவரது கணவர் மற்றும் மாமியார் ஆகியோர் பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரத்தில் சும்னா பேகத்தை அடித்து கொடுமைப் படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று உச்சக்கட்ட கொடுமையாக குடும்பத்தார் அனைவரும் சேர்ந்து சும்னா பேகத்தின் வாயில் ஆசிட் ஊற்றியுள்ளனர். இதில் அவரது வாய் முழுவதும் வெந்துள்ளது.
பிறகு அவரை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்குச் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து போலிஸார் அவரது கணவர், மாமியார் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆண் குழந்தைக்குப் பதில் பெண் குழந்தை பிறந்தால் மனைவி வாயில் ஆசிட் ஊற்றி குடும்பமே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“நம் தலை யாரிடமும் எதற்காகவும் தாழக் கூடாது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் உறுதிமொழி!
-
“அன்புக் குழந்தைகளே.. பதற்றமின்றி தேர்வை அணுகுங்கள்!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
கோவையில் வனக்கோட்டம், மதுக்கரையில் தொழில்நுட்பம்.. வனவிலங்குகளை பாதுகாக்க ட்ரோன் கண்காணிப்பு பிரிவு!
-
மதுரை வந்த பிரதமர் மோடி.. எய்ம்ஸ் முதல் நீட் தேர்வு வரை... பட்டியலிட்டு கேள்வி எழுப்பிய செல்வப்பெருந்தகை!
-
சேத்துமடை முகாம் திறப்பு : Trekking உடன் எழில் கொஞ்சும் இயற்கையை ரசிக்க வேண்டுமா?.. விவரம் உள்ளே!