India
மாணவிகள் முன் ஆபாசமாக நடந்துகொண்ட பிரபல மலையாள நடிகர்.. போக்சோவில் கைது செய்த போலிஸ் !
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஸ்ரீஜித் ரவி. மலையாள நடிகரான இவர், தமிழில் வெளியான கும்கி, வேட்டை, அசுரவதம், மதயானைக்கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் வில்லன் தோற்றத்தில் நடித்துள்ளார். தற்போது சில மலையாள படங்களில் நடித்து வரும் இவர், அந்த பகுதியில் பிரபலமான நடிகராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த வாரம் திருச்சூரிலுள்ள ஆயந்தோல் எஸ்.என்.பார்க் அருகே 11 மற்றும் 5 வயது சிறுமிகள் நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது அவர்களை பார்த்ததும், தனது உடைகளை கழற்றி நிர்வாணமாக நின்று, ஆபாச செயல்களில் ஈடுபட்டுள்ளார். பின்னர் ஒரு கருப்பு நிற காரில் ஏறிச்சென்றுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சிறுமிகள் அவர்கள் பெற்றோரிடம் சொல்ல, ஆனால் அவர்களுக்கு அடையாளம் தெரியவில்லை. எனவே அவர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர்.
பின்னர் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அந்த பகுதியில் இருந்த சிசிடிவியை ஆய்வு செய்தனர். அப்போது அந்த நபர் ஸ்ரீஜித் ரவி என்று தெரியவந்தது. இதையடுத்து இன்று காலை திருச்சூர் மேற்கு காவல் நிலைய காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரித்தனர்.
அப்போது ஸ்ரீஜித் ரவிக்கு தனக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு மருந்து உட்கொள்வதாகவும் காவல்துறையிடம் தெரிவித்தார். இருப்பினும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
ஏற்கனவே கடந்த 2016 ஆம் ஆண்டு இதேபோல் 16 பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக நடந்து கொண்டதால், பாலக்காடு காவல்துறையினரால் ஸ்ரீஜித் ரவி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!