தமிழ்நாடு

"பாத்ரூம் போயிட்டு வரேன் சார்.." தப்பி ஓடிய குற்றவாளி... ஒரு மணி நேரத்தில் விரட்டி பிடித்த காவல்துறை !

நீதிமன்ற வளாகத்தில் கழிப்பறைக்கு செல்வதாக கூறி தப்பித்த கைதி ஒருவரை, ஒரு மணி நேரத்திலேயே காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ள சம்பவம் பொதுமக்களிடம் பாராட்டை பெற்று வருகிறது.

"பாத்ரூம் போயிட்டு வரேன் சார்.." தப்பி ஓடிய குற்றவாளி... ஒரு மணி நேரத்தில் விரட்டி பிடித்த காவல்துறை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள வடதொரசலூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது இரு சக்கர வாகனம் திருடு போய் விட்டதாக தியாகதுருகம் பகுதி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதை விசாரித்த காவல்துறையினர், இது தொடர்பாக திருக்கோவிலூர் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த நிசார் அகமது என்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட நிசார் அகமதுவை கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக காவல்துறையினர் அழைத்து சென்றனர். அப்போது நீதிமன்ற வாசலில் வைத்து தனக்கு அவசரமாக பாத்ரூம் வருவதாக கூறி அடம்பிடித்துள்ளார் நிசார் அகமது. இதனால் காவலர்கள் அவரை பாத்ரூமுக்கு செல்ல அனுமதித்தனர்.

"பாத்ரூம் போயிட்டு வரேன் சார்.." தப்பி ஓடிய குற்றவாளி... ஒரு மணி நேரத்தில் விரட்டி பிடித்த காவல்துறை !

பின்னர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்ற நிசார் அகமது நீண்ட நேரமாகியும் வரவில்லை. எனவே அவரை தேடுவதற்காக கழிப்பறைக்கு சென்ற காவலர்கள், நிசார் அகமது தப்பி சென்றுள்ளதை உணர்ந்தனர்.

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வக்குமார் உத்தரவின்பேரில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலையத்திலும் தப்பியோடிய நபர் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவே அவர்கள் அனைவரும் நிசார் அகமதுவை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

"பாத்ரூம் போயிட்டு வரேன் சார்.." தப்பி ஓடிய குற்றவாளி... ஒரு மணி நேரத்தில் விரட்டி பிடித்த காவல்துறை !

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேருந்து நிலையத்தில், வெளியூர் தப்பிச்செல்ல முயன்ற நிஷார் அகமதுவை சங்கராபுரம் காவல்துறையினர் அதிரடியாக மடக்கி பிடித்து தியாகதுருகம் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பிச்சென்ற குற்றவாளியை ஒரு மணி நேரத்தில் மடக்கி பிடித்த சங்கராபுரம் காவல் துறையினருக்கு சக காவல் அதிகாரிகள், பொதுமக்கள் என அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories