India
இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்.. இளம்பெண் எடுத்த அதிரடி முடிவு!
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருக்கும்போது இளைஞர் ஒருவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். பின்னர் அந்த பெண்ணை மிரட்டி வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்த அந்த இளைஞன் இதை வீடியோவாகவும் எடுத்து வைத்துக்கொண்டுள்ளார்.
இந்த சம்பவத்தை வெயியே சொன்னால் வீடியோவை வெளியிட்டு பெற்றோரை கொலைசெய்துவிடுவேன் என அந்த இளைஞர் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அச்சமடைந்த அந்த பெண் இது குறித்து யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார்.
அதன் பின்னர் அந்த இளைஞர் மேலும் சில முறை அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அந்த பெண்ணை தனியாக ஒரு இடத்துக்கு அழைத்து சென்ற அவர், அங்கிருந்த தனது நண்பர்கள் 3 பேரை வைத்து அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனால் அந்த பெண் கர்ப்பமடைந்த நிலையில், அந்த இளைஞர் அவரை கொலை செய்ய முயன்றுள்ளார். மேலும் அடுத்த நாள் அந்த பெண்ணை அந்த இளைஞர்கள் மீண்டும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் அந்த பெண்ணை அடித்து கடுமையாக காயப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் இது குறித்து அந்த பெண் தியோபந்த் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.பாதிக்கப்பட்ட அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Also Read
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !
-
பப்ஜி முதல் பாரம்பரிய விளையாட்டுகள் வரை.. சென்னையில் கேமிங் திருவிழா... குவிந்த இளைஞர்கள் !
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?