உலகம்

61 வயது மூதாட்டியை திருமணம் செய்த 25 வயது பிரபலம்.. குழந்தை பெற 1 கோடி செலவு செய்த விசித்திர சம்பவம்!

அமெரிக்காவில் 25 வயது இளைஞர் ஒருவர் 61 வயது மூதாட்டியை திருமணம் செய்து குழந்தை பெற முடிவு செய்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

61 வயது மூதாட்டியை திருமணம் செய்த 25 வயது பிரபலம்.. குழந்தை பெற 1 கோடி செலவு செய்த விசித்திர சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

அமெரிக்காவை சேர்ந்த 61 வயது மூதாட்டி செரில் என்பவருக்கு 7 பிள்ளைகளும், 17 பேரக்குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், இவருக்கு கடந்த கடந்த 2012 ஆம் ஆண்டு டிக்டாக் பிரபலம் மெக்கெயின் என்பவரை சந்தித்துள்ளார். இருவருக்கும் 37 வயது வித்தியாசம் இருந்துள்ளது.

பின்னர், 8 ஆண்டுகள் சந்தித்துக்கொள்ளாத இருவரும் 2020 ஆம் ஆண்டு மீண்டும் சந்தித்துள்ளனர். அப்போது இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது.

61 வயது மூதாட்டியை திருமணம் செய்த 25 வயது பிரபலம்.. குழந்தை பெற 1 கோடி செலவு செய்த விசித்திர சம்பவம்!

அதைத் தொடர்ந்து கடந்த ஒரு வருடமாக இருவரும் டேட்டிங் செய்து வந்த நிலையில் தங்கள் காதலை மெக்கெயின் தனது டிக்டாக் கணக்கில் வெளிப்படையாக அறிவித்துள்ளார். அவரது டிக்டாக் கணக்கை 22 லட்சம் பேர் பின்தொடருகிறார்கள்.

மேலும் செரிலை திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் மெக்கெயின் அறிவித்துள்ளார். செரிலுக்கு திருமணத்தன்று மோதிரம் போடுவதற்காக பணம் தேவைப்படுவதாகவும் தனது பாலோவ்வர்ஸிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

61 வயது மூதாட்டியை திருமணம் செய்த 25 வயது பிரபலம்.. குழந்தை பெற 1 கோடி செலவு செய்த விசித்திர சம்பவம்!

அதைத் தொடர்ந்து அவரது கணக்குக்கு ஏராளமான நபர்கள் நன்கொடை அளித்துள்ளனர். இதை வைத்து செரிலுக்கு மோதிரம் வாங்கிய மெக்கெயின் டென்னசி நகரில் வைத்து அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியை இணையம் வாயிலாக சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர். மூதாட்டி செரிலால் தற்போது குழந்தை பெற்றெடுக்க முடியாது என்பதால் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளனர். இதற்காக இவர்கள் இந்திய மதிப்பில் 1 கோடி ரூபாய் செலவும் செய்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories