India
குறையும் உலக பணக்காரர்களில் சொத்து மதிப்பு.. உயரும் அதானி, அம்பானியின் சொத்து மதிப்பு! காரணம் என்ன?
கொரோனா தாக்கம், ரஷ்யா -உக்ரைன் போர் போன்ற காரணங்களால் உலக அளவில் பொருளாதாரத்தில் பெரும் மந்த நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக உலகெங்கும் வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ளது. அதோடு பங்கு சந்தைகளிலும் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இது போன்ற காரணங்களால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதே காரணங்களால் உலகத்தின் பெரும் பணக்காரர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஜெப் பிசோஸ், ஏலான் மஸ்க், மார்க் சுக்கர்பெர்க் போன்ற பணக்காரர்களின் சொத்து மதிப்பும் 60 பில்லியன் டாலர் அளவு கடுமையாக சரிந்துள்ளது.
உலக அளவில் ஏற்பட்டுள்ள இந்த பொருளாதர பாதிப்பு இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது. இந்தியாவின் ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவு சரிந்துள்ளது. ஆனால் இந்த பாதிப்பு ஏதும் மோடியின் செல்ல பிள்ளைகளான அதானி, அம்பானியை கொஞ்சம் கூட பாதிக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது இந்த தருணத்தில் அதானியின் , சொத்து மதிப்பு 22.1 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது. இது இந்திய மதிப்பில் 1 லட்சத்து 73 ஆயிரம் கோடியாகும். இதேபோல அம்பானியின் சொத்து மதிப்பு 23 ஆயிரத்து 685 கோடி அதிகரித்துள்ளது.
ரஷ்யாவில் இருந்து தள்ளுபடி விலையில் இந்தியாவுக்கு கிடைக்கும் கச்சா எண்ணெயை அதிக விலைக்கு விற்பனை செய்வதன் மூலம் அம்பானியின் சொத்து மதிப்பு இந்த அளவு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அதானிக்கு குறைந்த விலையில் இந்திய வளங்கள் அள்ளி கொடுக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ஒன்றிய அரசின் வழக்கை நான் விசாரிக்க கூடாது என அரசு நினைக்கிறது- தலைமை நீதிபதி கவாய் பகிரங்க குற்றச்சாட்டு
-
SIR : பீகாரில் நடந்தது இங்கும் நடக்காது என்று உத்தரவாதம் தர தேர்தல் ஆணையம் தயாரா? - முரசொலி கேள்வி !
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!