India
சாதனை மாநிலங்கள் பட்டியலில் பீனிக்ஸ் பறவையாய் மீண்டெழுந்த தமிழ்நாடு - திமுகவை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி
திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் தமிழகத்தின் தொழிற்வளர்ச்சியை பெருக்க பல்வேறு முயற்சியால் மேற்கொள்ளப்பட்டன. புதிதாக தொழில் தொடங்குவோருக்கு பல்வேறு வசதிகள் செய்துகொடுக்கப்பட்டன.
தமிழக தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூட பல்வேறு தொழில் மாநாடுகளை நடத்தி தமிழகத்தின் தொழிற்வளர்ச்சியை பெருக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் அமீரக நாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈடுத்தார்.
இந்த நிலையில் எளிதில் தொழில் தொடங்குவதற்கான சூழலைக் கொண்டிருக்கும் மாநிலங்களின் பட்டியலை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாடு சாதனை மாநிலங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட இந்த பட்டியலில் தமிழ்நாடு,ஆந்திரா,தெலங்கானா,குஜராத், அரியானா, கர்நாடகா, பஞ்சாப் உள்பட 7 மாநிலங்கள் முன்னணி சாதனை மாநிலங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரகாண்ட், உபி ஆகிய மாநிலங்கள் சாதனையாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. முன்னேற துடிக்கும் மாநிலங்கள் பட்டியலில் அசாம், கேரளா, கோவா ஆகியவை முக்கிய இடம் பிடித்துள்ளன.
தொழில்துறையில் வளர்ந்து வரும் மாநிலங்கள் பட்டியலில் பீகார், மணிப்பூர், மேகாலயா, நாகலாந்து, திரிபுரா, டெல்லி போன்ற மாநிலங்களும், சண்டிகர், அந்தமான் நிகோபார், டாமன் டையூ, தத்ரா நாகர் ஹவேலி, புதுச்சேரி ஆகியவை இடம் பிடித்துள்ளது.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!