India
ஆத்திரத்தில் மனைவியை 4வது மாடியிலிருந்து தூக்கி வீசி கொலை செய்த கணவன்.. சம்பவத்தின் பின்னணி என்ன?
உத்தரப்பிரதேச மாநிலம் தாஜ்கஞ்ச் பகுதியை சேர்ந்த ரித்திகா சிங் என்பவர், கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகாஷ் கவுதம் என்பவரை திருமணம் செய்தார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் இவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபேஷன், உணவு, பயணம் குறித்த பதிவுகளை தொடர்ச்சியாக பதிவிட்டு, 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஃபாலோயர்களைக் கொண்டுள்ளார்.
இதையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு, ரித்திகாவிற்கு முகநூல் மூலமாக விபுல் அகர்வால் என்பவர் அறிமுகனார். இவருடன் நெருங்கி பழகி வந்த இவர், கணவருக்கு தெரியாமல் அடிக்கடி அவரை சந்தித்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு கணவர் ஆகாஷுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக, அவரை பிரிந்து விபுலுடன் சேர்ந்து வாழத் துவங்கியுள்ளார். திருமணம் செய்யாமல் காதலன் விபுலுடன் வாழ்ந்து வந்த ரித்திகா, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 'ஓம் ஸ்ரீ'' என்ற அடுக்குமாடி குடியிருப்பில் 4 ஆவது மாடியில் குடியேறினர்.
இந்த நிலையில் நேற்று ரித்திகாவின் வீட்டிற்கு ரித்திகாவின் கணவரான ஆகாஷ், இரண்டு ஆண்கள், இரண்டு பெண்களுடன் வந்தார். அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்தவர்கள் ரித்திகா, விபுல் இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். அதுமட்டுமின்றி, காதலன் விபுலின் கைகளை கட்டி, அருகிலிருந்த பாத்ரூமில் அடைத்தனர். மேலும் ரித்திகாவின் கைகளையும் கயிற்றால் கட்டி, 4-வது மாடியில் இருந்து அவரை தூக்கி வீசியுள்ளார். இதை கண்ட விபுல், பயந்து போய், அங்கிருந்த ஜன்னல் கண்ணாடியை உடைத்து கூச்சலிட்டுள்ளார். இவரது கூச்சல் சத்தத்தை கேட்டு, அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் அந்த கும்பலில் இரண்டு ஆண்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
அங்கு மாட்டிக்கொண்ட ரித்திகா கணவரான ஆகாஷ் மற்றும் அவருடன் வந்த 2 பெண்களையும் பிடித்து அக்கம்பக்கத்தினர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் ரித்திகாவின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிசிடிவி காட்சிகளை வைத்து தப்பியோடிய இருவரையும் தேடும் பணியில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கணவனே மனைவியை மாடியில் இருந்து தூக்கி எறிந்து கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!
-
கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!