இந்தியா

பா.ஜ.கவுக்கு ஆதரவா? - 16 எம்.எல்.ஏக்களை அதிரடியாக தூக்கிய சிவசேனா..

சிவசேனா கட்சிக்கு அதிருப்தி தெரிவித்த எம்.எல்.ஏ.க்களில் 16 பேரை தகுதி நீக்கம் செய்து அக்கட்சி அதிரடியாக அறிவித்துள்ளது.

பா.ஜ.கவுக்கு ஆதரவா? - 16 எம்.எல்.ஏக்களை அதிரடியாக தூக்கிய சிவசேனா..
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளை கொண்டு 'மகா விகாஸ் அகாடி ' என்ற பெயரில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியை பா.ஜ.க. கலைக்க முயற்சிப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை வைத்து வந்தனர்.

இந்த குற்றச்சாட்டுக்கள் உண்மை என்று நிரூபிக்கும் வகையில் சிவ சேனா கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முகாமிட்டுள்ளார். தற்போதைய நிலையில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு 39 எம்.எல்.ஏக்கள் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே-க்கு எதிராக ஒரு தனி அணியையும் திரட்டி வருகிறார். சிவசேனா கட்சியின் மொத்தமுள்ள 55 எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானோர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், அங்கு ஆட்சி கலையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பா.ஜ.கவுக்கு ஆதரவா? - 16 எம்.எல்.ஏக்களை அதிரடியாக தூக்கிய சிவசேனா..

இந்த விவகாரத்தில் பா.ஜ.க.வின் தலையீடு இருப்பதாக பலரும் விமர்சித்து வந்த நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏக்களுடன் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த வீடியோவில், "நமது சுக துக்கங்கள் எல்லாம் ஒன்றுதான். நாம் ஒற்றுமையாக இருந்தால் வெற்றி நமக்குதான். ஒரு தேசிய கட்சி.. "மகாசக்தி". உங்களுக்கு தெரியும், அவர்கள் பாகிஸ்தானை வீழ்த்தினர். அவர்கள் நமக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்து இருக்கின்றனர். அனைத்து உதவிகளையும் செய்வதாக அறிவித்துள்ளனர். எனவே சிவசேனா கட்சி 'மகாவிகாஸ் கூட்டணி'-யில் இருந்து வெளியேறி பா.ஜ.க.வுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும்" என்று பேசினார்.

பா.ஜ.கவுக்கு ஆதரவா? - 16 எம்.எல்.ஏக்களை அதிரடியாக தூக்கிய சிவசேனா..

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சிவசேனா தலைவர்கள் தொடர்ந்து தொடர்பு கொண்டு சமரசப்படுத்த முயன்றனர். தொடர்ந்து அசாமில் முகமிட்டிருக்கும் எம்.எல்.ஏ.க்களை சமாதான படுத்தி அழைத்து வருவதாக கூறிச்சென்ற மற்றொரு எம்.எல்.ஏவும் ஏக்நாத் ஷிண்டே பக்கம் சாய்ந்தார். இதனால் சிவசேனா எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில், தற்போது அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்த 16 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து துணை சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற சிவ சேனா கட்சியின் செயற்குழு கூட்டத்தில், நீக்கம் செய்த எம்.எல்.ஏக்கள் கட்சி பெயரை இனி பயன்படுத்தக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த சம்பவம் மாஹாராஸ்ட்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories