India
“நிர்பந்தத்தால் நான் சாகவில்லை” : ஒடிசா நடிகை மரணம் இயற்கையானது அல்ல - போலிஸிடம் சிக்கிய தற்கொலை கடிதம்!
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் அடுத்த நயபள்ளி கட்சாஹி சேர்ந்தவர் பிரபல நடிகை ரஷ்மிரேகா ஓஜா. பிரபல தொலைக்காட்சி மூலம் மக்களிடையே தனக்கென தனி இடத்தை தக்க வைத்தவர் ரேஷ்மிரேகா. இந்நிலையில், ரேஷ்மிரேகா சந்தோஷ் பட்ரா என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொண்ட முடிவெடுத்து தங்குவதற்கு என்று வீட்டு ஒன்றையும் வாடக்கைக்கு எடுத்து தேவையான பொருட்களை வீட்டில் வாங்கி வைத்துள்ளனர்.
அடுத்தாண்டு இவர்களின் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிதாக குடியேறிய வீட்டில் ஒருமாதமாக வசித்து வந்த நிலையில், நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வீட்டு உரிமையாளர் அளித்த தகவலின் பேரில் வந்த ஜகத்சிங்பூர் போலிஸார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலிஸார் விசாரணை நடந்தி வைத்தனர்.
போலிஸார் நடத்திய விசாரணையின் போது, மேலும், வீட்டில் இருந்து இரண்டு துப்பாக்கி, ஒரு கத்தி மற்றும் வெடிமருந்துகளை கைப்பற்றினர். மேலும் அங்கிருந்த தற்கொலைக் குறிப்பு கடிதத்தையும் கைப்பற்றினர்.
இதுகுறித்து போலிஸார் கூறுகையில், “நடிகை ரஷ்மிரேகா ஓஜா எழுதிய தற்கொலை குறிப்பு கடிதத்தில் யாருடைய நிர்பந்தத்திலும் தான் சாகவில்லை. ஆனால், அவரது மரணம் இயற்கையானது அல்ல என்பது தற்கொலைக் குறிப்பு கடிதத்தில் இருந்து தெளிவாக தெரிகிறது. பிரேத பரிசோதனைக்கு பிறகே அவரது மர்ம மரணத்திற்கான காரணம் தெரியவரும்” என்று தெரிவித்துள்ளார்.
ரேஷ்மிரேகாவை அவரது காதலன் கொலை செய்ததாக அவரது தந்தை குற்றச்சாட்டியுள்ள நிலையில், ரேஷ்மிரேகா தற்கொலை செய்துக்கொண்டா ? அல்லது கொலை செய்யப்பட்ட என்ற கோணத்தில் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
2026-ல் தமிழ்நாடு அரசால் முன்னெடுக்கப்படும் விளையாட்டு போட்டிகள்! : துணை முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை!
-
சிறுவர் - சிறுமியினர் டவுசர் அணியத் தடை... பாஜக ஆளும் உ.பி. கிராமத்தின் உத்தரவால் ஷாக்! - பின்னணி என்ன?
-
பொருநையை தொடர்ந்து தஞ்சையில் மாபெரும் சோழ அருங்காட்சியகம் : டெண்டர் வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
-
“நயினார் நாகேந்திரனின் எண்ணம் தமிழ்நாட்டில் எடுபடாது” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
பிராட்வேயில் ரூ.23 கோடியில் “முதல்வர் படைப்பகம் & நவீன நூலகம்”... அடிக்கல் நாட்டினார் துணை முதலமைச்சர்!