இந்தியா

ஒடிசா நடிகை மர்மமான முறையில் மரணம்.. பெற்றோர் சொன்ன ‘பகீர்’ குற்றச்சாட்டு - காதலனிடம் போலிஸார் விசாரணை!

ஒடிசாவைச் சேர்ந்தவர் பிரபல நடிகை ரேஷ்மிரேகா மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா நடிகை மர்மமான முறையில் மரணம்.. பெற்றோர் சொன்ன ‘பகீர்’ குற்றச்சாட்டு - காதலனிடம் போலிஸார் விசாரணை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஒடிசாவைச் சேர்ந்தவர் பிரபல நடிகை ரேஷ்மிரேகா. பிரபல தொலைக்காட்சி மூலம் மக்களிடையே தனக்கென தனி இடத்தை தக்க வைத்தவர் ரேஷ்மிரேகா. இந்நிலையில், ரேஷ்மிரேகா சந்தோஷ் பட்ரா என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொண்ட முடிவெடுத்து தங்குவதற்கு என்று வீட்டு ஒன்றையும் வாடக்கைக்கு எடுத்து தேவையான பொருட்களை வீட்டில் வாங்கி வைத்துள்ளனர்.

ஒடிசா நடிகை மர்மமான முறையில் மரணம்.. பெற்றோர் சொன்ன ‘பகீர்’ குற்றச்சாட்டு - காதலனிடம் போலிஸார் விசாரணை!
EngPortal

அடுத்தாண்டு இவர்களின் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிதாக குடியேறிய வீட்டில் ஒருமாதமாக வசித்து வந்த நிலையில், மர்மமான முறையில் ரேஷ்மிரேகா உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து தகவலறிந்துவந்த போலிஸார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலிஸார் விசாரணை நடந்தி வைத்தனர்.

ஒடிசா நடிகை மர்மமான முறையில் மரணம்.. பெற்றோர் சொன்ன ‘பகீர்’ குற்றச்சாட்டு - காதலனிடம் போலிஸார் விசாரணை!

போலிஸார் நடத்திய விசாரணையின் போது, ரேஷ்மிரேகாவை அவரது காதலன் கொலை செய்ததாக அவரது தந்தை குற்றச்சாட்டியுள்ள நிலையில், ரேஷ்மிரேகா தற்கொலை செய்துக்கொண்டா ? அல்லது கொலை செய்யப்பட்ட என்ற கோணத்தில் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories