India
சேர் மீது ஏறி ஜன்னல் திரையை சரி செய்ய முயன்ற மாணவி.. 5வது மாடியிலிருந்து கீழே விழுந்ததில் நடந்த சோகம்!
கர்நாடக மாநிலம் மங்களூர் நகர், கத்ரி அருகே உள்ள கங்கநாடி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஐந்தாவது மாடியில் வசித்து வந்தவர் முகமது இம்தியாஸ் (48). இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இதில் முதல் மகளான சேஷையர் இன்தியாஜ் (15) பிஜய் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இன்று மாலை தனது வீட்டில் பால்கனியில் சேர் மீது ஏறி பால்கனியில் திரைச்சீலைகளை சரிசெய்துக்கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவரின் வீட்டின் வெளிப்புறம் கீழே தவறி விழுந்துவிட்டார். சுமார் 60 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததால் தலை மற்றும் கால்முறிவு ஏற்ப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் மாணவிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் இது சம்பந்தமாக மங்களூர் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!