India
மனைவியை துண்டு துண்டாக வெட்டி உடலை பிளாஸ்டிக் கேனில் அடைத்து வைத்த சைக்கோ கணவன்.. தெலங்கானாவில் கொடூரம்!
தெலங்கானா மாநிலம், மகபூப்நகரை சேர்ந்தவர் அனில்குமார். இவர் சரோஜா என்ற பெண்ணை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இதையடுத்து திருமணமான சில மாதங்களிலேயே இவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தம்பதிக்குள் அடிக்கடி சண்டை வந்துள்ளது.
பிறகு கணவனிடம் கோபித்துக் கொண்டு சரோஜா தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். பின்னர் அவரை சமாதானப் படித்து அவரது பெற்றோர் ஒரு மாதத்திற்கு முன்புதான் கணவன் வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர். இந்நிலையில் சரோஜாவின் பெற்றோர் மகளுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டபோது போன் சுவிட் ஆப் செய்யப்பட்டிருந்தது. மேலும் அவரது கணவருக்கு போன் செய்தபோது அவரும் எடுக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த சரோஜாவின் பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீடு பூட்டியிருந்தது. இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த போலிஸார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பிளாஸ்டிக் கேன் ஒன்றில் சரோஜாவின் உடல் துண்டு, துண்டாக வெட்டப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்
இது குறித்து போலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அனில் குமாருக்கு ஏற்கனவே திருமணம் நடந்துள்ளது. இதை மறைத்து சரோஜாவைக் காதலித்து திருமணம் செய்துள்ளார். இது தெரியவந்ததால் தம்பதிகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தன்று ஏற்பட்ட சண்டையில் மனைவியைக் அடித்து கொலை செய்துள்ளார். பிறகு அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் கேனில் அடைத்து வைத்துள்ளார். உடலை காட்டில் வீசி திட்டமிட்டநிலையில்தான் அனில்குமார் சிக்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள அனில்குமாரை தேடிவருகின்றனர்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!