தேனி மாவட்டம், போடி மேலசொக்கணதபுரத்தை சேர்ந்தவர் ராம தேவி. இவரது ஜெயராமன். இவர்கள் இருவரும் நான்கு வயது பேத்தியுடன் மேலசொக்கநாதபுரம்திலிருந்து போடிக்கு பொருட்கள் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.
பின்னர் இவர்கள் வாகனம் போடி அருகே வரும் போது, சின்னமனூரில் இருந்து போடி நோக்கி வந்த தனியார் பேருந்து மீது மோதியுள்ளது. இதில் கீழே விழுந்த ராம தேவி மீது பேருந்தின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், கணவர் ஜெயராம், நான்கு வயது பேத்தியும் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தனர். இந்த விபத்து குறித்து அறிந்து அங்கு வந்த போலிஸார் ராமதேவியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கணவன் கண்முன்னே, பேருந்து சக்கரத்தில் சிக்கி மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.