India
காதல் திருமணம் செய்த இளைஞர் நடுரோட்டில் குத்தி கொலை.. ஒரே மாத்தில் பதைபதைக்கும் 2 ஆணவக் கொலைகள்!
ஹைதராபாத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்புதான், காதலி கண்முன்னே காதலன் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை குறித்து நடந்த விசாரணையில், காதலர்கள் இருவரும் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் குடும்பத்தினரே மகளின் காதல் கணவரை கொலை செய்தது தெரியவந்தது.
இந்நிலையில் மீண்டும் இதே ஹைதராபாத்தில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் நீரஜ் பன்வார். இவர் வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்துக் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதிக்கு இரண்டு மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்நிலையில், நேற்று தந்தையுடன் வெளியே சென்ற நீரஜ் பன்வாரை நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென அவரை சரமாரியாகக் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் நீரஜ் பன்வார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ததில் நீரஜ் பன்வார் வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்ததால், பெண்ணின் வீட்டாரே அவரை கொலை செய்தது தெரியவந்துள்ளது.
பின்னர் இந்த கொலையில் ஈடுபட்ட ரோஹித், ரஞ்சித், கவுசிக், விஜய் ஆகிய நான்குபேரை போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே மாத்தில் மட்டும் இரண்டு ஆணவக் கொலை நடந்துள்ள சம்பவம் ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
‘RCB பெயர் இல்லை Brand.. 19 வருட வரலாற்றிலேயே முதல் முறையாக 30 கோடி அமெரிக்க டாலர்!’ - முழு விவரம் உள்ளே!
-
6 இலட்சம் நூல்கள் - வாசிப்பு பெருகினால்தான் தமிழ்நாடு... : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
‘முதலமைச்சரின் தாயுமானவர்’ திட்டத்தின் பெயரையும் மாற்றும் த.வெ.க! : பெயர் மாற்றி ‘ஏமாற்றும்’ அவலம்!
-
மேகதாது அணை.. கர்நாடக செல்லும் முதல்வர் விஜய்.. வீடியோ போடலாம், விடியலைத் தராது: எச்சரிக்கும் முரசொலி!
-
“முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை!”: கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!