India
“முதல் வருடம் ஜொலிக்கிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அபாரம்” : மலையாளப் பத்திரிகை புகழாரம்!
மலையாள பத்திரிகை ஒன்றில் தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.கழக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு வெளியிட்ட சிறப்பு செய்தியில், தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான ஆட்சி முதல் வருடம் ஜொலிக்கிறது என்றும் ஆட்சி அபாரமாக நடை பெறுகின்றது என்றும் கொரோனாவுக்கு எதிராக போராடி வெற்றி கண்டுள்ளது. அநீதிக்கு எதிராக இந்த ஆட்சி போராடியது மட்டுமின்றி தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன என்றும் புகழாரம் சூட்டியுள்ளது.
இது சம்பந்தமாக அந்த மலையாள பத்திரிகையில் வந்த சிறப்பு செய்தி வருமாறு:-
“முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’’... என்று கூறி தமிழகத்தின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்று 7 ஆம் தேதியுடன் ஓர் வருடம் ஆகின்றது. எதிர்முனையில் இருந்த மாறுபட்ட தலைவர்கள்கூட முதல்வரின் நடவடிக்கையில் தற்போது மனமாற்றம் ஏற்பட்டு இருப்பதை தமிழக மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
முதல்வர் ஆட்சிக்கு வந்தது புதிய உலகத்தின் தொடக்கமாக அமைந்திருந்தது. அவர் பதவி ஏற்றவுடனே முதல் வேளையாக பால்விலையைக்குறைத்தார். மகளிர் அனைவரும் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றினார். நிறைவேற்றியும் வரு கிறார்.
சென்னையில் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த நிலையில் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராகப் பொறுப்பேற்றார். தொலைநோக்குப் பார்வையுடன் கொரோனா பரவலை கட்டுப்படுத்தியது மட்டுமின்றி, கொரோனா வார்டுக்குள் நேரிடையாகவே சென்று கொரோனா நோயாளிகளை பார்த்து அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினார். கொரோனா மூன்றாவது அலை பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை - அதற்கு முதல்வர் ஸ்டாலின் எடுத்த நடவடிக்கைகளே காரணமாக அமைந்திருந்தது.
அதற்கடுத்த அலை ஏற்பட்டாலும் அதனை சந்திக்க அரசாங்கம் தயார் நிலையில் இருந்தது. இவை அத்தனைக்கும் மு.க.ஸ்டாலின் அவர்களின் செயல் பாடுகளே காரணமாகும். தமிழகத்தில் ரௌடிகள் சாம்ராஜ்யத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்கினார். இதனால் பொதுமக்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மேலும் ஆதரவு பெருகியுள்ளது. தயவு தாட்சண்யம் என்று பார்க்காமல் அவரது கட்சிக்காரர்கள் தவறு செய்தாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தார். இதனால் கட்சியினர் கட்டுப்பாட்டுடன் இருக்கிறார்கள்.
குஜராத்தில் காவல் துறை அதிகாரியாக இருந்த போது, அமித்ஷாவை கைது செய்த டி.ஜ.பி. கந்தசாமியை தற்போது ஊழல் தடுப்பு மற்றும் குற்றங்கள் தடுப்பு அதிகாரியாக நியமித்து இருக்கிறார் என்றால் குற்றங்களும் தவறுகளும் நடக்கக் கூடாது என்ற காரணத்தினால் தான்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் (அதாவது 6 மாதங்களிலேயே) வரையில் 8364 கோடி ரூபாய் அளவிற்கு தமிழகத்திற்கு முதலீடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லர் டாலர் அந்நிய செலவாணி ஈட்டிடும் குறிக்கோள் கொண்டு இந்த அரசு செயல்பட்டு வருகிறது. பொருளாதாரத்தை மேம்படுத்த ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம்ராஜன் உள்பட 5 முக்கிய ஆலோசகர்களை நியமித்துள்ளார்.
தமிழகத்திற்கும் கேரளாவிற்கும் மிக நல்லுறவு உள்ளது. அப்படி இருந்தும் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் ஒரு அடி கூட விட்டுத் தரமாட்டோம் என்று சட்டப்பேரவையில் பல தடவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முழக்கமிட்டுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது” இவ்வாறு அந்த மலையாள பத்திரிகை சிறப்பு கட்டுரை எழுதியுள்ளது
Also Read
-
100-வது நாளை நெருங்கும் பிக்பாஸ் வீடு; கராசார பொங்கல் விருந்துக்கு தயாராகும் போட்டியாளர்கள்!
-
90 அணைகளை கண்காணிக்க : ஒருங்கிணைந்த மேலாண்மை மைய கட்டடத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
பொங்கல் திருநாள்; 34,087 சிறப்பு பேருந்துகள் இயக்கம் : உங்க ஊர் பேருந்து எங்கே நிற்கும் தெரியுமா?
-
திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரான தீர்ப்பு : அமைச்சர் ரகுபதி பேட்டி!
-
”உங்க கனவை சொல்லுங்கள்” தமிழ்நாடு அரசின் புதிய திட்டம் : அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன முக்கிய தகவல்!