India
வரதட்சணை கொடுமை: மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவன்.. காவல்நிலையத்தில் இளம்பெண் பகீர் வாக்குமூலம்!
ராஜஸ்தான் மாநிலம், புரத்பூரைச் சேர்ந்த நபருக்கு 2019ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து வரதட்சணையாகப் பெண் வீட்டார் கொடுக்க வேண்டிய ரூ.1.5 லட்சம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த பெண்ணின் கணவர் அவரை தினமும் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் தனது மனைவியை உறவினர்களுடன் சேர்ந்து கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை அவரது கணவரே வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றி வரதட்சணை பணத்தைக் கழித்துக் கொள்கிறேன் என மனைவியிடம் கூறி மிரட்டி வந்துள்ளார்.
இதனால் அந்தப் பெண் இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து அவரது கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வரதட்சணைக்காக மனைவியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, கணவனே அதை வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
Also Read
-
“மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 பற்றி ‘பேச்சு - மூச்சே’ இல்லை!” : தங்கம் தென்னரசு விமர்சனம்!
-
“மாற்றம் என சொன்னது பெயர் மாற்றம் தானா?.. இதற்கு எதற்கு முதலமைச்சர்?”: வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!