India
“100 ரூபாய்க்காக நடந்த தகராறில் அண்ணன் கொலை - தம்பியின் வெறிச்செயல்: நடுங்கிய உறவினர்கள்” - பின்னணி என்ன?
மத்திய பிரதேச மாநிலம், பாய்ரிஹா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபுதயா பால். இவரது தம்பி தீன்தயா பால். இந்நிலையில் சம்பவத்தன்று தம்பி தீன்தயால், தனது அண்ணன் பிரபுதயாலிடம் 100 ரூபாய் தரும்படி கேட்டுள்ளார். இதற்கு அவர் உனக்கு எல்லாம் பணம் தர முடியாது என கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தீன்தயால், அண்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆவேசமடைந்த தம்பி, அண்ணனை கீழே தள்ளி கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து அப்பகுதி மக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பிறகு அங்கு வந்த போலிஸார் பிரபுதயா உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிறகு இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து அண்ணனை கொலை செய்த தம்பி தீன்தயாலை கைது செய்துள்ளனர். 100 ரூபாய்க்காக அண்ணனையே தம்பி அடுத்து கொலை செய்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!
-
TVK Fails... ! ஆட்சியே அமைக்கவில்லை அதற்குள் : த.வெ.க-வினரின் மூன்று சம்பங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி!
-
ரவுடிபோல் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய த.வெ.க MLA : பொதுமக்கள் அதிர்ச்சி!
-
“தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன குறை வைத்தார் திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின்?” : முரசொலி தலையங்கம்!
-
”கொளத்தூரின் ஒவ்வொரு தெருவிலும் நான் உருவாக்கிய திட்டங்கள்”- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!