India
Surprise gift கொடுப்பதாக கூறி.. வருங்கால கணவருக்கு இளம்பெண் செய்த கொடூரம்.. உறவினர்கள் அதிர்ச்சி!
ஆந்திர மாநிலம் அனகா பள்ளியைச் சேர்ந்தவர் புஷ்பா. கல்லூரி மாணவியான இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணா என்ற வாலிபருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருமணத்தை முன்னிட்டு சர்ப்ரைஸ் கொடுப்பதாக கூறி ராமகிருஷ்ணாவை மலைப்பகுதி ஒன்றிற்கு புஷ்பா அழைத்துச் சென்றுள்ளார். அப்போது கிஃப்ட் கொடுப்பதாக கூறி அவரின் கண்களை தனது துப்பட்டாவால் கட்டியுள்ளார்.
பிறகு தான் மறைத்து எடுத்து வந்திருந்த கத்தியை எடுத்து ராமகிருஷ்ணாவின் கழுத்தில் குத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த ராமகிருஷ்ணா வலியால் துடித்துள்ளார்.
இதைப்பார்த்து மனம் வருந்திய புஷ்பா உடனே அவரை மீட்டு அருகே இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். அப்போது மருத்துவர்களிடம், மலைப்பகுதியில் செல்லும்போது அவர் கீழே விழுந்ததால் காயம் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.
ஆனால், அவரது பேச்சில் நம்பிக்கை இல்லாத மருத்துவர்கள் உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பிறகு அங்கு வந்த போலிஸார் புஷ்பாவிடம் விசாரணை செய்தபோது, திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லாததால் அவரை கொலை செய்ய முயற்சித்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து போலிஸார் புஷ்பாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணமகனின் கழுத்தை அறுத்து பெண் ஒருவர் கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!