India
மனைவியின் அந்தரங்க போட்டோக்களை வாட்ஸ் அப் குரூப்பில் பரப்பிய சைக்கோ கணவன்; சிறையில் தள்ளவைத்த பெண் போலிஸ்
மனைவியின் அந்தரங்க படத்தை வாட்ஸ் அப் குரூப்பில் பகிர்ந்த போலிஸ் கான்ஸ்டபிளின் கணவரை மும்பை மரைன் போலிஸார் கைது செய்திருக்கிறார்கள்.
கைது செய்யப்பட்ட அந்த நபர் மீது பெண்களை இழிவுபடுத்துதல், தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
மகாராஷ்டிர மாநில புனேவைச் சேர்ந்த 27 வயதான போலிஸ் பெண் கான்ஸ்டபிளுக்கும், 31 வயதான ஒருவருக்கும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடந்திருக்கிறது. இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
திருமணத்துக்கு முன்பே பெண் போலிஸ் வேறொரு நபருடன் காதல் உறவில் இருந்திருக்கிறார். இதனை தனது கணவரிடமும் தெரிவித்திருக்கிறார். குழந்தை பிறந்த பிறகு கணவருக்கு அந்த பெண் மீது சந்தேகம் வரவே அடிக்கடி இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
இப்படி இருக்கையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு இருவரும் பிரிந்து அடுத்து அந்த பெண் மும்பையிலும் அவரது கணவர் புனேவிலும் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
இதனிடையே, மாதம் ஒரு முறை புனேவுக்கு சென்று கணவரை பார்த்துவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார் அப்பெண் போலிஸ். அப்போதெல்லாம் அந்த நபர் அந்தரங்க மற்றும் நிர்வாண புகைப்படங்களை கேட்டு வற்புறுத்தியிருக்கிறார்.
தொடக்கத்தில் மறுத்தவர் பின்னர் சில புகைப்படங்களை கணவருக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பியிருக்கிறார். இதனை வைத்துக்கொண்டு தனது வாட்ஸ் அப்பில் குழு ஒன்றை உருவாக்கி அதில் மனைவியின் நண்பர்கள், உறவினர்களை இணைத்து அந்த குழுவில் மனைவியின் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.
இது தொடர்பாக தகவல் அறிந்த அந்த பெண் கான்ஸ்டபிள், போலிஸிடம் புகாரளித்திருக்கிறார். இதனையடுத்தே அப்பெண்ணின் கணவரை மும்பை மரைன் போலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!