India
’எனது மனைவி பெண்ணே அல்ல.. என்னை ஏமாத்திட்டாங்க” : நியாயம் கேட்டு உச்சநீதிமன்ற கதவைத் தட்டிய கணவர்!
தனது மனைவி பெண்ணே அல்ல என அவரது கணவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்படவைத்துள்ளது. இந்த தம்பதிக்கு 2016ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. பின்னர் சில நாட்கள் கழித்து மாதவிடாய் எனக் கூறி அவரது மனைவி தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதையடுத்து மீண்டும் கணவன் வீட்டிற்கு வந்துள்ளார்.
ஆனால், மனைவியை இவர் நெருக்கும்போது எல்லாம் அவர் தவிர்த்தே வந்துள்ளார். இதனால் அவர் மீது கணவருக்கு சந்தேகம் வந்துள்ளது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளார். அப்போது, அவருக்கு இம்பர்ஃபோரேட் ஹைமென்' எனப்படும் மருத்துவ பிரச்சனை இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது யோனிப் பகுதியில் ஆண்குறி போன்று ஒரு சிறிய கட்டி இருந்துள்ளது.
இதை அறுவை சிகிச்சை செய்து செயற்கை பிறப்புறுப்பை உருவாக்கினாலும், அவர் கர்ப்பம் தரிப்பது சாத்தியமற்றது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது கணவர் மனைவியை தாய் வீட்டிலேயே ஒப்படைத்துள்ளார். இந்நிலையில்தான், தன்னை ஏமாற்றி திருமணம் செய்து வைத்துள்ளாதாக கூறி அவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அவரது மனைவிக்கு, நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. இவர் ஏற்கனவே மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை அந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து அது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
Also Read
-
“அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக ‘ஆவணங்கள்’ விளங்குகின்றன!” : அமைச்சர் கோவி.செழியன் பேச்சு!
-
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார் : கண்ணீரில் திரையுலகம்!
-
“தமிழ்நாட்டிற்கு மிகப்பழமையான கடல்சார் வரலாறுண்டு” : நீலப் பொருளாதார மாநாட்டில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
’தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ : தமிழ்நாடு முழுவதும் செப்.20,21 தீர்மான ஏற்புக் கூட்டங்கள்!
-
யார் பொறுப்பேற்பது? : விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி!