India
உணவில் விஷம் வைத்து கொலை.. கணவன் உடலை துண்டு துண்டாக வெட்டி செப்டிக் டேங்கில் வீசிய கொடூர மனைவி!
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பப்லு ஜடோ. அவரது மனைவி சுனிதா. இந்த தம்பதிக்கு பிரசாந்த் ஜடோன் என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில், பிரசாந்த் ஜடோன் தனது நண்பர் ஒருவருக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அப்போது அவர், "எனது தந்தையை, தாய் கொலை செய்ததுபோல உண்னை கொலை செய்துவிடுவேன்" என விரட்டியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த நபர் இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனால் போலிஸார் பப்லு ஜடோ வீட்டிற்கு சென்று அவரது மனைவி சுனிதாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கொடுத்த வாக்குமூலத்தைக் கேட்டு போலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பிரசாந்த் ஜடோன் தனது மனைவி சுனிதாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் கணவரை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். இதன்படி கடந்த 5ம் தேதி விஷம் கலந்த உணவை கணவருக்குக் கொடுத்துள்ளார். இதை சாப்பிட்ட உடன் அவர் மயங்கியுள்ளார்.
பின்னர் தனது நண்பர்கள் ரிஸ்வான் கான், பாய்யு ஆகியோர் உதவியுடன் கணவனின் உடலை ஐந்து துண்டுகளாக வெட்டி வீட்டில் இருக்கும் செப்டிக் டேங்கில் போட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து கணவரை கொலை செய்த சுனிதா, கொலை சம்பவம் தெரிந்தும் போலிஸாரிடம் தெரிவிக்காத மகன் ஆகிய இரண்டு பேரை போலிஸார் கைது செய்தனர். மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த மற்ற இரண்டுபேரை போலிஸார் தேடிவருகின்றனர்.
Also Read
-
வாக்களித்த மக்களுக்கு கைக்கொடுக்க இவ்வளவு தயக்கம் ஏன்? - முதலமைச்சரின் சர்ச்சை செயலுக்கு எழும் கண்டனம்!
-
அதிரடியாக ஜாகீர் கானை இறக்கிய சிஎஸ்கே.. தோனியின் மாஸ்டர் மைண்ட்.. இதுதான் ரகசியம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!
-
உயிரைக் காக்கும் மருந்தா? விளம்பரத்திற்கு பயன்படும் மோதிரமா? : த.வெ.க.வை நோக்கி எழும் கேள்விகள்!
-
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 : தங்கத்தை தட்டித் தூக்கிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!
-
“எங்கப்பா காமராஜர் படம்?” : வெளிச்சத்திற்கு வந்த த.வெ.க அரசின் பித்தலாட்டம்!