India
கல்யாணத்தை நிறுத்த இப்படியொரு ப்ளானா? - பீகாரில் மணமகனும், தந்தையும் செய்த செயலால் பரபரத்த திருமண வீடு!
தனது உறவினர்களுக்கு தாமதமாக உணவு பரிமாறியதால் ஆத்திரமடைந்த மணமகன் திருமணத்தையே நிறுத்தியிருக்கிறார். இந்த சம்பவம் பீகாரில் நடந்திருக்கிறது.
பட்டுவானா கிராமத்தில் உள்ள மோஹானி பஞ்சாயத்தில் உள்ள இஸ்வாரி தோலாவில் திருமணம் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது.
பூர்னியாவைச் சேர்ந்த ராஜ்குமார் ஒராவ்ன் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மீனா தேவி என்பவரின் மகளுக்கும்தான் திருமணம் நடைபெற இருந்தது. இதற்கான வரவேற்பு நிகழ்ச்சியின் போது மணமகனின் உறவினர்களுக்கு தாமதமாக சாப்பாடு பரிமாறப் பட்டிருக்கிறது.
இதனையறிந்த மணமகனும், அவரது தந்தையும் ஆத்திரமடைந்ததோடு சடங்குகளை நிறுத்திய அவர்களை ஒரேடியாக திருமணத்தையும் நிறுத்தியிருக்கிறார்கள்.
இதனை தீர்த்து வைக்க உள்ளூர் பஞ்சாயத்துதாரர்கள் இரு வீட்டாரிடமும் சமாதானம் பேசியும் எதுவும் எடுபடவில்லை. இதனையடுத்து மணமகன் மண்டபத்தை விட்டு வெளியேறியிருக்கிறார்.
மேலும், மாப்பிள்ளையின் தந்தை திருமணத்துக்காக பெண்வீட்டார் கொடுத்த பொருட்களை திருப்பி கொடுத்ததோடு, திருமண சமையலுக்கு செலவான பணத்தையும் கொடுத்திவிட்டு சென்றிருக்கிறார்.
இந்த நிலையில், பெண்ணின் தாயார் மீனா தேவி காஸ்பா காவல் நிலையத்தில் மணமகன் மற்றும் அவரது தந்தை மீது திருமணத்தை நிறுத்தியதற்காக புகாரளித்திருக்கிறார்.
புகாரை ஏற்றுக்கொண்ட போலிஸார் விசாரணை நடத்துவதாக கூறியிருக்கிறார்கள்.
Also Read
-
“மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 பற்றி ‘பேச்சு - மூச்சே’ இல்லை!” : தங்கம் தென்னரசு விமர்சனம்!
-
“மாற்றம் என சொன்னது பெயர் மாற்றம் தானா?.. இதற்கு எதற்கு முதலமைச்சர்?”: வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!