இந்தியா

ஆணுறைக்குள் வைத்து தங்கம் கடத்தல்; கொச்சி ஏர்போர்ட்டில் சிக்கியது எப்படி?

வளைகுடாவில் இருந்து வரும் பயணிகளை கண்காணித்து வந்த அதிகாரிகளுக்கு ஷார்ஜாவில் இருந்து வந்த இரு பயணிகள் மீது சந்தேகம் எழுந்திருக்கிறது.

ஆணுறைக்குள் வைத்து தங்கம் கடத்தல்; கொச்சி ஏர்போர்ட்டில் சிக்கியது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய கிழக்கு நாடுகள் உட்பட பல வெளிநாடுகளில் இருந்து நூதன முறையில் மறைத்து வைத்து தங்கம் கடத்திக் கொண்டு வரும் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் பிடிபட்டு வருகிறது.

அவற்றில் சில சம்பவங்கள் சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு சுங்கத்துறை அதிகாரிகளையே அதிர வைக்கும் வகையிலேயே அமைந்திருக்கும்.

அந்த வகையில் கொச்சி விமான நிலைய அதிகாரிகள் வளைகுடாவில் இருந்து வந்த கடத்தல்காரர்களை பிடித்திருக்கிறார்கள்.

கேரளாவுக்கு வளைகுடாவில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்திக் கொண்டு வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது.

இதனையடுத்து வளைகுடாவில் இருந்து வரும் பயணிகளை கண்காணித்து வந்த அதிகாரிகளுக்கு ஷார்ஜாவில் இருந்து வந்த இரு பயணிகள் மீது சந்தேகம் எழுந்திருக்கிறது.

உடனடியாக அவர்களை மடக்கிப்பிடித்து அவர்களது உடமைகளை சோதித்திருக்கிறார்கள். அப்போது பையில் இருந்த ஆணுறையை சோதித்தபோது காப்ஸ்யூல் வடிவத்தில் தங்கம் இருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

உடனடியாக அதனை கடத்தி வந்த கேரளாவின் மலப்புரத்தைச் சேர்ந்த சித்தார்த் மதுசூதனன், நிதின் உன்னிகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்த சுங்கத்துறையினர், கடத்திக் கொண்டு வரப்பட்ட தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

கடத்தப்பட்ட 1.9 கிலோ தங்கத்தின் மதிப்பு ரூ.1கோடி ஆகும் என கூறியிருக்கிறார்கள்.

banner

Related Stories

Related Stories