India
கல்லூரிக்குச் சென்ற மாணவியை கடத்தி மிரட்டிய பா.ஜ.க MLA - பாட்னாவில் கொடூரம்!
பாட்னாவின் பூத்நாத் சாலையில் அமைந்துள்ள குடியிருப்புப் பகுதியில் வசிப்பவர் ரிஷிமா ராஜ். அவர் பிப்ரவரி 9ஆம் தேதி காலை 9 மணிக்கு வணிகவியல் கல்லூரிக்குச் சென்றிருந்தார். மதியம் 2 மணியளவில் திரும்பி வர வேண்டிய அவர் திரும்பி வராததால், அவரது தாயார் ரேகா குமாரி, ரிஷிமாவை போனில் தொடர்பு கொண்டார்.
அப்போது ரிஷிமாவின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்துள்ளது. இதனிடையே, 3.10 மணிக்கு ரிஷிமாவின் போனில் இருந்து ரேகாவுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் ஒரு தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த எண்ணைத் தொடர்பு கொண்டபோது, அதை பா.ஜ.க எம்.எல்.ஏ வினய் பிஹாரி எடுத்து பேசியுள்ளார். மேலும், ரேகாவை மிரட்டியுள்ளார். கடத்தப்பட்ட பெண், தனது மருமகன் ராஜீவ் சிங்கிடம் இருப்பதாகவும், எஸ்.பி அல்லது டி.எஸ்.பி -யிடம் சென்று எந்தப் பயனும் இல்லை என்றும் அவர் ரேகாவிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ரேகா கொடுத்த புகாரின் பேரில், வினய் பிஹாரி மீது பாட்னா போலிஸார் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ஆப்கானிஸ்தானை புரட்டி போட்ட நிலநடுக்கம் : 600 பேர் பலி - 1500 பேர் படுகாயம்!
-
அரசு கல்லூரியில் 560 தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள் : அமைச்சர் கோவி.செழியன் தகவல்!
-
Insta-வில் வெளியிட்ட வீடியோ.. ரவுடியை திருக்குறள் வாசிக்க வைத்து நூதன தண்டனை கொடுத்த தூத்துக்குடி போலீஸ்!
-
“தமிழ்நாட்டுக்கு வந்து கொண்டிருக்கும் முதலீடுகளை பார்த்து எரிச்சல் அடையும் பழனிசாமி” - முரசொலி விமர்சனம்!
-
“உங்கள் நிறுவனங்களை தமிழ்நாட்டில் Invest செய்ய Motivate செய்யுங்கள்!” - Germany-ல் முதலமைச்சர் கோரிக்கை!