தமிழ்நாடு

சென்னை மின்சார ரயிலில் பெண்களிடம் ஆபாச சைகை; ஒரேயொரு வீடியோவால் போதை ஆசாமியை கம்பி எண்ண வைத்த இளம்பெண்!

சென்னை மின்சார ரயிலில் இளம்பெண்களிடம் ஆபாசமாக நடந்துக்கொண்ட போதை ஆசாமியை அதிரடியாக கைது செய்துள்ளது காவல்துறை.

சென்னை மின்சார ரயிலில் பெண்களிடம் ஆபாச சைகை; ஒரேயொரு வீடியோவால் போதை ஆசாமியை கம்பி எண்ண வைத்த இளம்பெண்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தனியார் யூடியூப் சேனலில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் ரேணுகா என்ற இளம்பெண். இவர் கடந்த வாரம் இரவு பணி முடித்துவிட்டு சென்னை கடற்கரை நிறுத்தத்தில் இருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரயிலில் பயணித்திருக்கிறார்.

அப்போது, அவருடன் சில பெண்களும் இருந்திருக்கிறார்கள். ரயில் மீனம்பாக்கத்தை வந்தடைந்த போது போதையில் தள்ளாடியபடி இளைஞர் ஒருவரும் பெண்களுக்கான பெட்டியில் ஏறியிருக்கிறார்.

அந்த சமயத்தில் திடீரென ரயிலில் இருந்த பெண்கள் முன்பு ஆபாச செயல்களில் அந்த இளைஞன் ஈடுபட்டிருக்கிறான்/. இதனைக் கண்ட ரேணுகா, உடனடியாக தன்னுடைய செல்போனில் போதை இளைஞனின் செயலை வீடியோவாக பதிவிட்டிருக்கிறார்.

பின்னர் இளைஞனை பெண்கள் திட்டியதை அடுத்து குரோம்பேட்டையில் இறங்கி தப்பியிருக்கிறான். இதனையடுத்து தாம்பரத்தில் இறங்கிய ரேணுகா என்ற பெண் அங்கிருந்த ரயில்வே போலிஸாரிடம் ஆதாரத்துடன் புகார் கொடுத்திருக்கிறார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலிஸார் போதை இளைஞனை பிடிக்க மும்முரமாக செயல்பட்டனர். அதன்படி மின்சார ரயிலில் பெண்களிடம் ஆபாசமாக நடந்துக்கொண்ட அந்த நபர் மீனம்பாக்கத்தை சேர்ந்த லட்சுமணன் (23) என தெரியவந்தது.

உடனே அந்த நபரை கைது செய்து விசாரித்தபோது குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார். பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலிஸார் லட்சுமணனை சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

இதனிடையே துணிச்சலாக செயல்பட்டு குற்றவாளியை பிடிக்க காரணமாக இருந்த ரேணுகாவுக்கு நெட்டிசன்கள் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories