India
மைனர் பெண்ணை ரேப் செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த திட்டம் : விமானம் ஏறும் போது சிக்கிய டிராவல் ஏஜென்ட்!
பாலியல் தொழில் ஈடுபடுத்துவதற்காக 16 வயதான பெண்ணை டெல்லிக்கு அழைத்துச் செல்லவிருந்த நாகேஷ் என்ற டிராவல் ஏஜென்ட் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கடந்த பிப்ரவரி 9ம் தேதியன்று கர்நடாகவில் உள்ள கெம்பேகவுடா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நாகேஷிடம் போலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது, கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறி வேலை தேடி பெங்களூருவுக்கு கடந்த செவ்வாய் அன்று வந்திருக்கிறார்.
அப்போது பேருந்து நிலையம் அருகே இருந்த பெண்ணை நோக்கி வந்த நாகேஷ் அப்பெண்ணிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தேவனஹள்ளியில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
அங்கு வைத்து 16 வயதான மைனர் பெண்ணை பலாத்காரம் செய்த நாகேஷ், டெல்லிக்கு செல்வதற்காக இருவருக்கும் விமான டிக்கெட் புக் செய்திருக்கிறார்.
இதனையடுத்து கெம்பேகவுடா விமான நிலையத்துக்கு சென்றபோது நாகேஷ் அந்த பெண்ணை சமாதானம் செய்து கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்வதை விமான நிலையத்தில் இருந்த CISF கண்டிருக்கிறார்கள்.
இதனால் சந்தேகமடைந்தவர்கள் அவர்களிடம் விசாரித்திருக்கிறார்கள். அப்போது, அப்பெண் கடத்தப்படுவதற்காக அழைத்து வரப்பட்டிருக்கிறார் என உறுதிபடுத்தியிருக்கிறார்கள்.
பின்னர் மேற்குறிப்பிட்ட நடந்த சம்பவங்கள் குறித்து அறிந்த CISF அதிகாரிகள் பெண்ணை அவரது குடும்பத்தினருடன் சேர்த்து வைத்திருக்கிறார்கள். இதனிடையே டிராவல் ஏஜென்ட் நாகேஷை பிடித்து போலிஸிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.
நாகேஷ் மீது பெண்ணை கடத்துவது மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள். அதில், டெல்லியில் உள்ள தர்யாகஞ்ச் பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த இருந்தது தெரிய வந்திருக்கிறது.
Also Read
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!