India
பெற்றோர்களே உஷார்.. குழந்தையைத் தூக்கி வீசிய பராமரிப்பாளர்: குஜராத்தில் அதிர்ச்சி!
குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்தவர் மித்தேஷ் பட்டேல். இவரும் அவரது மனைவியும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இதனால் தங்களுக்குப் பிறந்த இரட்டை குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்காகக் கடந்த செப்டம்பர் மாதம் பராமரிப்பாளர் ஒருவரை நியமித்துள்ளார்.
இதையடுத்து வீட்டில் சி.சி.டி.வி காட்சிகளை பட்டேல் பொருத்தியுள்ளார். இந்நிலையில் நேற்று வேலைக்குச் சென்ற பட்டேலுக்கு அவரது தாயாரிடம் இருந்து தொலைப்பேசி அழைப்பு வந்துள்ளது. அப்போது அவர் "குழந்தை ஒன்று அழுது கொண்டே இருக்கும் போது மயங்கி விழுந்து விட்டதாக" கூறியுள்ளார்.
பின்னர் உடனே பட்டேல் வீட்டிற்குச் சென்று குழந்தையைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், மூளையில் காயம் ஏற்பட்டுள்ளது என்று கூறினர்.
இதைக்கேட்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் குழந்தைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் வீட்டிற்கு வந்த பட்டேல் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார்.
அப்போது, குழந்தை பராமரிப்பாளர், பாதிக்கப்பட்ட குழந்தையின் காதை திருகி அடித்துத் துன்புறுத்துவதுடன், குழந்தையைப் படுக்கையில் தூக்கி வீசும் காட்சிகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இந்த ஆதாரங்களைக் கொண்டு அவர் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் விரக்த்தியில் குழந்தையை அடுத்து கொடுமைப் படுத்தியுள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!