India
குப்பையில் கிடந்த டிபன் பாக்ஸ் வெடித்ததில் சிறுவன் பலி... பீகாரில் தொடரும் குண்டுவெடிப்பு சம்பவங்கள்!
பீகார் மாநிலம், பாகல்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சிறுவன் அம்ரித் தாஸ். அவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, குப்பையில் டிபன் பாக்ஸ் ஒன்று கிடந்துள்ளது.
இதைச் சிறுவன் அம்ரித் தாஸ் எடுத்துத் திறந்துள்ளார். அப்போது அந்த டிபன் பாக்ஸ் வெடித்துச் சிதறியது. இதில் சிறுவனுக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அப்பகுதி மக்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலிஸார் டிபன் பாக்ஸ் வெடித்த பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது மேலும் இரண்டு வெடிகுண்டுகளை போலிஸார் கைப்பற்றியுள்ளனர். இந்த வெடிவிபத்து குறித்து போலிஸார் அப்பகுதி மக்களிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஒரே வாரத்தில் மட்டும் இதுபோன்று இரண்டு வெடிகுண்டுகள் வெடித்துள்ளன. இதில் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
’உங்களுடன் ஸ்டாலின்’ - மக்களுக்கு சரியான தீர்வு கிடைக்க வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சென்னையில் இன்று மழை பெய்யுமா? : வானிலை நிலவரம் என்ன?
-
“வட சென்னை மட்டுமல்ல, தமிழ்நாடு முழுக்க குடிசைகள் இருக்கக் கூடாது!” : துணை முதலமைச்சர் சூளுரை!