India
பா.ஜ.கவை வீழ்த்த உருவானது புதிய கூட்டணி.. பதற்றத்தில் மோடி : கலக்கத்தில் அமித்ஷா - சிக்கலில் யோகி!
உத்தர பிரதேசம் உள்பட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதையடுத்து, இப்போதே உத்தர பிரதேசத்தில் தேர்தல் களம் பரபரப்படைந்துள்ளது.
உ.பி.யில் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் கட்சி தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், காங். பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும், உ.பியில் தொடர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
அதேநேரத்தில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பா.ஜ.கவும் போராடி வருகிறது. மேலும், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளும் தனித்து போட்டியிடுவதால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
எதிர்க்கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டால், அது பா.ஜ.கவுக்கு சாதமாகிவிடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்து வரும் நிலையில், மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தேசிய கட்சிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
பிரதான எதிர்க்கட்சியான அகிலேஷின் சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போவது இல்லை எனத் தெரிவித்திருந்தது. இதனால், பா.ஜ.க தங்களது எதிர்ப்பு வாக்குகள் சிதறும் என எதிர்பார்த்தது.
ஆனால், ஜெயந்த் சவுத்ரியின் ராஷ்டிரிய லோக் தள் கட்சியுடன் சமாஜ்வாதி கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது. பின்னர் அகிலேஷ் யாதவும் ஜெயந்த் சவுத்ரியும் நேரில் சந்தித்து கூட்டணியை உறுதி செய்தனர்.
இதன் அடுத்த கட்டமாக, இன்று நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அகிலேஷும், ஜெயந்த் சவுத்ரியும் இணைந்து வெளியிடுள்ளனர்.
ஜாட், முஸ்லிம்கள் அதிகமுள்ள மேற்கு உ.பி.யில் பா.ஜ.கவுக்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், மேற்கு உத்தர பிரதேசத்தில் வலுவாக உள்ள ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியுடன் சமாஜ்வாதி கூட்டணி அமைத்திருப்பது பா.ஜ.கவுக்கு பெரும் குடைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
சிறுபான்மையினர் மற்றும் விவசாயிகள் பா.ஜ.க அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ள நிலையில், சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியுடன் கூட்டணி அமைத்திருப்பது பா.ஜ.கவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் பா.ஜ.க தலைமையும், உ.பி முதல்வர் ஆதித்யநாத்தும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Also Read
-
“தி.மு.க.வின் இன்னொரு முகத்தை நீங்கள் பார்க்க வேண்டி இருக்கும்!“: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
-
“தமிழர்களைப் படிப்பறிவற்றவர்கள் என்பதா? பியூஷ்கோயல் நாவை அடக்கிப் பேச வேண்டும்!” : முதலமைச்சர் கண்டனம்!
-
பெரியார் மண்ணில் அ.தி.மு.க இப்படி பா.ஜ.க-வுடன் கைகோர்த்து நிற்கலாமா? : பழனிசாமிக்கு டி.ராஜா கேள்வி!
-
#Delimitation இந்தியாவின் தென் முனையில் இருந்து உரிமைக் குரல் எழுப்புவோம் : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
செய்தியாளர் மீது தாக்குதல் : ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளரின் செயலால் பரபரப்பு!