India
8ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. வீடியோ எடுத்து மிரட்டிய லாரி டிரைவர் : போக்சோவில் கைது!
ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பக்கத்து வீட்டில் வசிக்கும் 8ஆம் வகுப்பு சிறுமியை வீட்டிற்கு அழைத்துள்ளார். இவர் தெரிந்தவர் என்பதால் அச்சிறுமியும் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அதை வீடியோ எடுத்து, இதை வெளியே சொன்னால் வீடியோவை வெளியிட்டுவிடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் தெரிவிக்காமல் இருந்துவந்தார். இதையடுத்து லாரி ஓட்டுநர் அந்த வீடியோவை தனது நண்பர்களுக்குப் பகிர்ந்துள்ளார்.
இதை அந்த நண்பர்கள் தங்களின் நண்பர்களுக்கு அனுப்பியுள்ளனர். இதைப்பார்த்த அப்பகுதி இளைஞர்கள் இதுகுறித்து சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த வீடியோவைப் பார்த்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!