இந்தியா

பெண் மீது மர்ம கும்பல் கொடூரமாகத் தாக்குதல்.. வெளியான CCTV காட்சி: டெல்லியில் நடந்த பயங்கரம்!

டெல்லியில் பெண் ஒருவரை நான்கு பேர் கொண்ட கும்பல் தாக்கும் சி.சி.டி.வி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண் மீது மர்ம கும்பல் கொடூரமாகத் தாக்குதல்.. வெளியான  CCTV காட்சி: டெல்லியில் நடந்த பயங்கரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லி ஷாலிமார் பாக் என்ற பகுதியில் மர்ம கும்பல் ஒன்று மூன்று பெண்களைக் கொடூரமாகத் தாக்கம் சி.சி.டி.வி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த சி.சி.டி.வி காட்சியில், கார் ஒன்றிலிருந்து இரண்டு பெண்கள் இறங்குகின்றனர். அப்போது அங்கிருந்து மர்ம கும்பல் ஒன்று இருவரையும் கொடூரமாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்வது போன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் நவம்பர் 19ம் தேதி இரவு நடைபெற்றுள்ளது. இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், பெண்களைத் தாக்கியவர்கள் யார் என்பது குறித்தும், எதற்காக இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது என்பது குறித்தும் போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் ஒருவரை நான்கு பேர் கொண்ட கும்பல் தாக்கும் சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories