India

தப்பிச் சென்ற கொலைக் குற்றவாளி.. சுட்டுப்பிடித்த போலிஸ் : பெங்களூருவில் நடந்தது என்ன?

கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் மனித உரிமைகள் பாதுகாப்பு ஆர்வலராகவும், ஊழல் இல்லா அமைப்பின் தலைவராகவும் இருந்தார். இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி ஸ்ரீதர் தனது காரில் சென்றுகொண்டிருந்தபோது, அவரைப் பின்தொடர்ந்து வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை வழி மறைத்து கொலை செய்தது.

இந்தக் கொலை சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். பின்னர் ரெட்டி நகரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ரகு என்பவரை போலிஸார் கைது செய்தனர். அப்போது ரகு முன்விரோதம் காரணமாகக் கொலை செய்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.

மேலும் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் ஹெண்ணூர் நெடுஞ்சாலையில் பதுக்கிவைத்திருப்பதாகக் போலிஸாரிடம் ரகு கூறினார். இதையடுத்து போலிஸார் ரகுவை அழைத்து அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது திடீரென ரகு போலிஸாரை தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றார்.

இதைப்பார்த்த காவல் ஆய்வாளர் வசந்தகுமார் ரகுவை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் ரகுவுக்கு குண்டடிபட்டு கீழே விழுந்தார். உடனே அவரை போலிஸார் பிடித்தனர். பின்னர் ரகுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

Also Read: பாராசூட்டின் கயிறு அறுந்து நடுக்கடலில் விழுந்த தம்பதி.. வெளியான அதிர்ச்சி வீடியோ: நடந்தது என்ன?