India

மூடநம்பிக்கையின் உச்சம்.. “புனிதநீர் தெளித்தால் போதும்”: உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நேர்ந்த கதி!

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் சதார். இவரது மகளுக்கு கடந்த ஒருவாரமாக காய்ச்சல் இருந்துள்ளது. ஆனால் காய்ச்சலுக்கு மருத்துவமனை அழைத்துச் செல்லாமல்குஞ்சிப்பள்ளியில் உள்ள மசூதியின் இமாம் உவைஸ்ஸிடம் அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு இமாம் உவைஸ்ஸி சிறுமிக்கு புனித நீர் என்ற பெயரில் தண்ணீரை தெளித்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வேண்டாம். இரவுக்குள் சரியாகிவிடும் என தெரிவித்துள்ளார். இமாமின் பேச்சைக் கேட்டு மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டியே வைத்திருந்த நிலையில், சிறுமிக்கு உடல்நிலை மோசமாகியுள்ளது.

இந்தவிவகாரம் அக்கம் பக்கத்தினருக்கு இடையே தெரிய அவர, குழந்தையின் உறவினர்கள் குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுமதித்துள்ளனர். அப்போது குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இதனைடுத்து இதுதொடர்பாக அப்துல் சதாரின் சகோதரர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலிஸார், உயிரிழந்த சிறுமியின் தந்தை மற்றும் இமாமை கைது செய்தனர். ஏற்கெனவே இதுபோல மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் தங்கள் குடும்பத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அப்துல் சதாரின் சகோதரர் தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் நடந்த பாலியல் வன்கொடுமை” : 14 சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோவில் கைது!