India

“ஊழலில் மிதக்கும் பா.ஜ.க அரசு.. ரூ.300 கோடி பேரம்” : புயலைக் கிளப்பும் மேகாலயா ஆளுநர்!

மேகாலயா ஆளுநராக இருப்பவர் சத்ய பால் மாலிக். இவர் முன்னதாக ஜம்மு காஷ்மீரின் ஆளுநராக இருந்தார். பிறகு சில மாதம் கோவாவின் ஆளுநராக இருந்துள்ளார்.

இந்நிலையில், கோவா அரசு மீது ஆளுநர் சத்ய பால் ஊழல் குற்றச்சாட்டு வைத்துப் பேசியிருப்பது பா.ஜ.க வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்குப் பேட்டியளித்த மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக், "ஜம்மு - காஷ்மீர் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டபோது ஊழல் நிறைந்த சில கோப்புகளை அழிக்குமாறு கூறினார்கள். ஆனால் நான் அதை மறுத்தேன்.

அதேபோல், அம்பானி தொடர்பான கோப்புக்கும், ஆர்.எஸ்.ஸ் சார்ந்த நபரின் கோப்புக்கும் அனுமதி கொடுத்தால் தலா 300 கோடி ரூபாய் கொடுப்பதாக எனது செயலாளரிடம் பேரம் பேசப்பட்டது. இதை தட்டிக் கேட்டதால் என்னை ஜம்மு - காஷ்மீரிலிருந்து மாற்றினார்கள்.

கோவா மாநிலத்தில் ஆளுநராக இருந்தபோது பா.ஜ.க அரசின் ஊழலைக் கேள்வி எழுப்பினேன். கோவாவில் பா.ஜ.க அரசு எதைச் செய்தாலும் அதில் ஊழல் இருக்கும். இந்த ஊழலை வெளிக் கொண்டு வந்ததால் நான் அங்கிருந்தும் மாற்றப்பட்டேன் என தெரிவித்துள்ளார்.

ஆளுநர் சத்ய பால் மாலிக்கின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஊழல் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும், கோவா முதல்வர் பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: "என்னது போராட்டம் பண்ணா... மோடி படம் காணாம போகுதா?" : அதிர்ச்சியில் பா.ஜ.க தொண்டர்கள்!