India
தண்ணீரில் மூழ்கடித்து 3 மாத குழந்தை கொலை.. YouTube வீடியோ பார்த்து தாய் செய்த கொடூர செயல் - நடந்தது என்ன?
மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜைன் மாவட்டத்திற்குட்பட்ட கச்ரோத் கிராமத்தைச் சேர்ந்தவர் சுவாதி. இவரது மூன்று மாத குழந்தை காணவில்லை என உறவினர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து பல இடங்களில் குழந்தையை தேடிபார்த்தும் கிடைக்காததால் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
பின்னர் போலிஸார் இந்த புகாரின் அடிப்படையில் சுவாதி வீட்டிற்கு வந்து சோதனை செய்தனர். அப்போது, வீட்டு மாடியிலிருந்த தண்ணீர் தொட்டியில் குழந்தை இறந்த நிலையில் மிதந்து இருந்தைப் பார்த்து போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.
பிறகு இது குறித்து சுவாதி மற்றும் அவரது கணவரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. பிறந்த மூன்று மாதமே ஆன தனது குழந்தையைச் சுவாதி கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து எப்படி கொலை செய்வது என செல்போனில் பல வீடியோக்களை பார்த்துள்ளார். பின்னர் ஒரு வீடியோவில் பார்த்தைக் கொண்டு குழந்தையைத் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார் என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
மேலும் 2018ம் ஆண்டு முதல் குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வசிக்கலாம் என சுவாதி தொடர்ந்து கணவனை வற்புறுத்தி வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் சுவாதியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“சமூகம் மேம்பட, சங்கிகள் கதற பெரியாரியம் உலகமயம் ஆகட்டும்!” - முரசொலி தலையங்கம்!
-
வரலாற்றில் இதுவரையில் இல்லாதது... ஒரே நாளில் அரசுக்கு குவிந்த ரூ.274.41 கோடி வருவாய் : பின்னணி என்ன?
-
தொழில்துறை,கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது- இங்கிலாந்துக்கான இந்திய தூதர் பாராட்டு!
-
ஹிந்துஜா குழுமம் ரூ.5000 கோடி முதலீடு: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் 13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
பணியின்போது கிடைத்த தங்கச் சங்கிலி.. பத்திரமாக ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு துணை முதலமைச்சர் பாராட்டு!